Homeசெய்திகள்இந்தியாபிரதமர் மோடியிடம் நேரடியாக கருத்து தெரிவிக்க வாய்ப்பு! ‘விக்சித் பாரத்’ உரையாடலில் பங்கேற்க செப்.30-க்குள் விண்ணப்பிக்கலாம்!

பிரதமர் மோடியிடம் நேரடியாக கருத்து தெரிவிக்க வாய்ப்பு! ‘விக்சித் பாரத்’ உரையாடலில் பங்கேற்க செப்.30-க்குள் விண்ணப்பிக்கலாம்!

-

- Advertisement -

2047-க்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதற்கான புதுமையான யோசனைகளை பிரதமரிடம் நேரடியாகத் தெரிவிக்கும் ‘விக்சித் பாரத் இளம் தலைவர்கள் உரையாடல்’ (Viksit Bharat Young Leaders Dialogue) நிகழ்வில் பங்கேற்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

we-r-hiring

சுவாமி விவேகானந்தரின் பிறந்தநாளான தேசிய இளைஞர் தினத்தை (ஜனவரி 12) முன்னிட்டு, டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் 2027 ஜனவரியில் நடைபெறும் இந்நிகழ்வுக்கான ஆன்லைன் போட்டிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன.

தேர்வு நடைபெறும் 5 கட்டங்கள்:

  • கட்டம் 1 (ஆன்லைன் வினாடி-வினா): செப்டம்பர் 1 முதல் செப்டம்பர் 30 வரை ‘மை பாரத்’ இணையதளத்தில் நடைபெறும்.

  • கட்டம் 2 (கட்டுரைப் போட்டி): அக்டோபர் 5 முதல் அக்டோபர் 19 வரை ஆன்லைனில் நடைபெறும்.

  • கட்டம் 3 (மாவட்ட அளவிலான PPT காட்சி): மாவட்டத்திற்குத் தேர்வாகும் சிறந்த 50 கட்டுரைகளுக்கு நவம்பர் 10 முதல் நவம்பர் 16 வரை ‘கடல்சார் பொருளாதாரம், மனிதவளம், உலகளாவிய போட்டித்திறன்’ என்ற கருப்பொருளில் PPT விளக்கக்காட்சி சுற்று நடைபெறும்.

  • கட்டம் 4 (மாநில அளவிலான உரையாடல்): நவம்பர் 17 முதல் டிசம்பர் 12 வரை நடைபெறும்.

  • கட்டம் 5 (தேசிய அளவிலான இறுதிப்போட்டி): டெல்லியில் 2027 ஜனவரி 10 முதல் 12 வரை நடைபெறும்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வம் உள்ள இளைஞர்கள் mybharat.gov.in என்ற ‘மை பாரத்’ இணையதளம் மூலம் பதிவு செய்து இப்போட்டிகளில் பங்கேற்கலாம். இதுவரை நாடு முழுவதும் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பொது வாழ்க்கையில் 25 ஆண்டுகளை நிறைவு செய்யும் பிரதமர் மோடி! ஒரு மாதம் ‘சேவை சங்கல்ப்’ இயக்கம் – பாஜக பிரம்மாண்ட ஏற்பாடு!

MUST READ