Homeசெய்திகள்தமிழ்நாடு2028 கும்பகோணம் மகாமகத் திருவிழா: ரூ.600 கோடி செலவில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் – 90 லட்சம்...

2028 கும்பகோணம் மகாமகத் திருவிழா: ரூ.600 கோடி செலவில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் – 90 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்ப்பு!

-

- Advertisement -

கோயில்கள் சீரமைப்பு மற்றும் கட்டமைப்புப் பணிகளைத் தீவிரப்படுத்த இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் திரு. எஸ். ரமேஷ் உயர்மட்டக் குழு அமைப்பு.2028 கும்பகோணம் மகாமகத் திருவிழா: ரூ.600 கோடி செலவில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் – 90 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்ப்பு!

12 ஆண்டுகளுக்கு ஒருமுறை வெகுவிமர்சையாகக் கொண்டாடப்படும் உலகப் புகழ்பெற்ற கும்பகோணம் மகாமகத் திருவிழா வரும் 2028-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நிலையில், இதற்கான முன்னேற்பாடுகள் குறித்து இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் திரு. எஸ். ரமேஷ் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

we-r-hiring

ரூ.600 கோடி மதிப்பீட்டில் திட்டங்கள்:
வேளாண்மைத் துறை அமைச்சர் திரு. ஆர். வினோத் முன்னிலையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ரமேஷ், 2028 மகாமகத் திருவிழாவைத் தமிழ்நாடு முழுவதும் பெருமை சேர்க்கும் வகையில் பிரம்மாண்டமாக நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

பக்தர்கள் வருகை கணிப்பு: இம்முறை சுமார் 70 லட்சம் முதல் 90 லட்சம் வரை பக்தர்கள் மகாமகத் திருவிழாவில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

நிதி ஒதுக்கீடு: பக்தர்களின் அடிப்படை வசதிகள், பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்புகளை மேம்படுத்தத் தோராயமாக ரூ. 600 கோடி செலவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திருப்பணிகளும் உள்கட்டமைப்பும்:
மகாமகத்தையொட்டி கும்பகோணத்தில் உள்ள அனைத்துக் கோயில்களிலும் திருப்பணிகள் மேற்கொண்டு குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) நடத்துவதற்கான முதற்கட்ட ஒப்புதல்கள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும், நெடுஞ்சாலைத் துறை மூலம் சாலைகளை விரிவுபடுத்துதல், நீர்வளத் துறை சார்பில் மகாமகக் குளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள நீர்நிலைகளைத் தூர்வாரி சீரமைத்தல் போன்ற பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

இவ்விழாவைச் சீராக நடத்தி முடிக்கத் தமிழக அரசின் சார்பில் உயர்மட்டக் குழு மற்றும் தனி அலுவலர் நியமிக்கப்பட்டு அனைத்துத் துறைப் பணிகளும் ஒருங்கிணைக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

தவெகவுக்கு மாநிலக் கட்சி அங்கீகாரம்: ‘விசில்’ சின்னத்தையும் நிரந்தரமாக ஒதுக்கியது தேர்தல் ஆணையம்!

MUST READ