Homeசெய்திகள்மாவட்டம்அமராவதி அணையிலிருந்து தண்ணீர் கோரி ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா: 10 ஊர் பொதுமக்கள் விடிய விடிய...

அமராவதி அணையிலிருந்து தண்ணீர் கோரி ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா: 10 ஊர் பொதுமக்கள் விடிய விடிய போராட்டம்!

-

- Advertisement -

அமராவதி அணையிலிருந்து ஆற்றுப் படுகையின் கடைமடைப் பகுதிகளுக்கு உடனடியாகத் தண்ணீர் திறந்து விடக் கோரி, 10-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வராண்டாவில் அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.அமராவதி அணையிலிருந்து தண்ணீர் கோரி ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா: 10 ஊர் பொதுமக்கள் விடிய விடிய போராட்டம்!

குடிநீருக்கும் வழி இன்றித் தவிக்கும் கிராமங்கள்
பயிர்களுக்கு நீர் பாய்ச்சுவது ஒருபுறமிருக்க, அன்றாடக் குடிநீருக்கும் கால்நடைகளுக்கும் கூட ஒரு சொட்டு தண்ணீர் இல்லாத மிக மோசமான நிலை அப்பகுதிகளில் நிலவி வருகிறது.

இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் வேதனையுடன் தெரிவிக்கையில்:  “எங்கள் கிராமங்களில் கடுமையான நீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மனிதர்கள் குடிப்பதற்கே தண்ணீர் இல்லாத நிலையில், நாங்கள் காசு கொடுத்து லாரிகள் மூலம் தண்ணீர் வாங்கி வந்துதான் கால்நடைகளின் தாகத்தைத் தீர்க்க வேண்டிய அவல நிலை உள்ளது. வாழ்வாதாரமே முற்றிலும் முடங்கிப்போய்விட்டது” என்று கண்ணீருடன் புலம்பினர்.

ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகை
தங்கள் பகுதிக்கு அமராவதி அணை நீர் உடனடியாக வந்தடைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருடன் திரண்டு வந்த கிராம மக்கள், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் சென்று வராண்டாவிலேயே அமர்ந்து முழக்கங்களை எழுப்பினர்.

அதிகாரிகள் தங்களை நேரில் சந்தித்து உறுதியான வாக்குறுதி அளிக்கும் வரை இடத்தை விட்டு நகர மாட்டோம் எனக்கூறி தர்ணாவில் ஈடுபட்டதால், அங்கு கூடுதல் காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

பேச்சுவார்த்தைக்குப் பின்னரே போராட்டம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டது.

தாளவாடி காவல் நிலைய சித்ரவதை சம்பவம்: எஸ்.பி. அதிரடி விசாரணை – இரு காவல்துறையினர் மீது நடவடிக்கை!

MUST READ