Homeசெய்திகள்தமிழ்நாடுவிநாயகர் சதுர்த்தி நாளை கொண்டாட்டம்: அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து

விநாயகர் சதுர்த்தி நாளை கொண்டாட்டம்: அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து

-

- Advertisement -

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா நாளை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் பொதுமக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

we-r-hiring

எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ஞானத்தின் வடிவமாக விளங்கும் விநாயகப் பெருமானின் திருவருளால் நாடெங்கும் நலமும், வீடெங்கும் வளமும் பெருக வேண்டும் என தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வாழ்த்து

காங்கிரஸ் கட்சியின் திருநாவுக்கரசர் தனது வாழ்த்தில், அனைவரின் வாழ்விலும் வளமும் நலமும் பெருகிட எல்லாம் வல்ல விநாயகப் பெருமானை பிரார்த்திப்போம் என தெரிவித்துள்ளார்.

என்.ஆர்.தனபாலன் வாழ்த்து

பெருந்தலைவர் மக்கள் கட்சியின் தலைவர் என்.ஆர்.தனபாலன், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மக்கள் அனைவரும் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் கடைபிடித்து இந்தியத் திருநாட்டின் பெருமையை காத்திட வேண்டும் என வாழ்த்து தெரிவித்துள்ளார்.

எர்ணாவூர் நாராயணன் வாழ்த்து

சமத்துவ மக்கள் கழகத்தின் தலைவர் எர்ணாவூர் நாராயணன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், உலகமெங்கும் அன்பும் அமைதியும் நிலவ வேண்டும் என்றும், நாடெங்கும் நலமும் வளமும் பெருக வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், ஒவ்வொரு வீட்டிலும் மகிழ்ச்சியும் மனநிம்மதியும் நிலவ வேண்டும் எனவும் அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மற்ற தலைவர்களும் வாழ்த்து

புதிய நீதி கட்சியின் தலைவர் ஏ.சி. சண்முகம், இந்திய தேசிய ரியல் எஸ்டேட் பில்டர்ஸ் லேண்ட் டெவலப்பர்ஸ் நிலத் தரகர்கள் நலச்சங்க அகில இந்திய தலைவர் டாக்டர் வி.என். கண்ணன், அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசிய தலைவர் டாக்டர் ஆ. ஹென்றி, விஜய் வசந்த் எம்.பி. உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகளும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொதுமக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி நாடு முழுவதும் கோயில்கள் மற்றும் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற உள்ளன. மக்கள் அனைவரும் பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாகவும் பண்டிகையை கொண்டாட அரசுத் துறைகள் சார்பிலும் பல்வேறு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

MUST READ