spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஆவின் பால் விலை உயர்வை தொடர்ந்து நெய் விலையையும் உயர்த்தியுள்ளது – ஆவின் நிறுவனம்

ஆவின் பால் விலை உயர்வை தொடர்ந்து நெய் விலையையும் உயர்த்தியுள்ளது – ஆவின் நிறுவனம்

-

- Advertisement -

 

கடந்த நவம்பர் மாதம் ஆவின் பாலின் விலை உயர்வை தாங்கிகொள்ள முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். இந்த பால் விலை உயர்வினால் குழந்தைகள் தாய்மார்கள் மற்றும் அனைத்து மக்களும் பெரும் பாதிப்பை அடைந்து உள்ளனர். அதனால், டீக்கடையில் விற்கும் டீ, காபி முதல் அனைத்து பால் சார்ந்த உணவுப்  பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது.

we-r-hiring

இந்த நிலையில் பால் விலை உயர்வை தொடர்ந்து, தற்போது, நெய் விலையையும் ஆவின் நிறுவனம் உயர்த்தியுள்ளது.

ஆவினின் 5 லிட்டர் நெய் பாட்டில் ரூ. 2,900 இருந்து ரூ.350 உயர்த்தப்பட்டு ரூ.  3,250 ஆக விற்க்கப்பட உள்ளது.

ஒரு லிட்டர் நெய் ரூ.580 இருந்து,ரூ. 50 உயர்த்தப்பட்டு ரூ. 630 ஆக விற்க்கப்பட உள்ளது.

500 மி. லி நெய் ரூ.290 இருந்து ரூ. 25 உயர்த்தப்பட்டு ரூ. 315 ஆக விற்க்கப்பட உள்ளது.

200 மி. லி நெய் ரூ.130 இருந்து ரூ.15 உயர்த்தப்பட்டு ரூ.145 ஆக விற்க்கப்பட உள்ளது.

100 மி. லி நெய் ரூ.70ல் இருந்து ரூ.5 உயர்த்தப்பட்டு ரூ.75 ஆக விற்க்கப்பட உள்ளது.

புதிய விலையில் ஆவின் நெய், இன்று முதல் விற்பனைக்கு வரும் என, அறிவிப்பு.

விலை உயர்வுக்கான காரணம்

பால் உற்பத்தி மற்றும் செயல்பாட்டுக்கான ஒட்டுமொத்த செலவு அதிகரிப்பால் இந்த விலை உயர்வு செய்யப்படுகிறது. கடந்த ஆண்டை விட கால்நடை தீவன செலவு மட்டும் சுமார் 20% அதிகரித்துள்ளது. உற்பத்தி செலவை சமப்படுத்தவதற்காக ஆவின் நிறுவனம்  பால் விலையை உயர்த்தியதாக கூறி உள்ளது. அதே காரணங்களின் அடிப்படையில் நெய் விலையும் உயர்த்தி இருப்பதாக கூறப்படுகிறது. நடப்பாண்டில் இரண்டாவது முறையாக, நெய் விலை உயர்த்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.

MUST READ