Homeசெய்திகள்க்ரைம்"மாஸ்டர் கூட ரொம்ப குளோஸ் போல?" — புதுச்சேரியில் ஜிம் பெண்ணை மிரட்டி ரூ.50 லட்சம்...

“மாஸ்டர் கூட ரொம்ப குளோஸ் போல?” — புதுச்சேரியில் ஜிம் பெண்ணை மிரட்டி ரூ.50 லட்சம் பறிக்க முயன்ற உரிமையாளர் கைது!

-

- Advertisement -

புதுச்சேரி அருகே உள்ள திருக்கனூர் பகுதியில், உடற்பயிற்சி செய்ய வந்த திருமணமான இளம் பெண்ணை மிரட்டி ரூ. 50 லட்சம் பணம் கேட்டு பிளாக்மெயில் செய்த ஜிம் உரிமையாளரைக் காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்."மாஸ்டர் கூட ரொம்ப குளோஸ் போல?" — புதுச்சேரியில் ஜிம் பெண்ணை மிரட்டி ரூ.50 லட்சம் பறிக்க முயன்ற உரிமையாளர் கைது!

ஜிம்மில் விரிந்த பேராசை வலை
புதுச்சேரி அடுத்த திருக்கனூரில் செயல்பட்டு வரும் உடற்பயிற்சி மையத்திற்கு 30 வயதான திருமணமான பெண் ஒருவர் தினமும் உடற்பயிற்சி செய்ய வந்து சென்றுள்ளார். அங்குள்ள மாஸ்டரிடம் பயிற்சி பெற்று வந்த நிலையில், அவர்களுக்கிடையே தூய்மையான குரு – சிஷ்யை உறவு மட்டுமே இருந்துள்ளது.  ஆனால், இதனை தவறாகச் சித்தரித்து பணம்பறிக்கத் திட்டம் தீட்டிய ஜிம் உரிமையாளர் பிரசாந்த் (32) என்பவர், அந்தப் பெண்ணின் வழியை மறித்து, “என்னம்மா… மாஸ்டர் கூட ரொம்ப குளோஸ் போல? எனக்கு நல்லாவே தெரியுமே” என்று ஆபாசமாகப் பேசி வம்புக்கு இழுத்துள்ளார்.

we-r-hiring

ரூ. 50 லட்சம் கேட்டு மிரட்டல்
தன் மானமும் சுயமரியாதையும் சீண்டப்பட்ட அதிர்ச்சியில் அந்தப் பெண் கண்டித்தபோதிலும், பிரசாந்த் தனது பேராசை திட்டத்தை வெளிப்படுத்தினார். “இதை அப்படியே ஒரு கதையாக்கி உன் புருஷனிடம் சொன்னால் உன் குடும்ப வாழ்க்கையே காலி. உன் வாழ்க்கை சீரழியாமல் இருக்க வேண்டும் என்றால் எனக்கு ரூ. 50 லட்சம் ரொக்கமாகத் தர வேண்டும்; இல்லையென்றால் அடுத்த நிமிடம் உன் கணவருக்குப் போன் போகும்” என மிரட்டியுள்ளார்.

த தந்தையின் ஆதரவும் போலீஸ் புகாரும்
செய்யாத தவறுக்கு மிரட்டி ரூ. 50 லட்சம் கேட்ட ஜிம் உரிமையாளரிடம் அஞ்சாமல் கடுமையாக வாக்குவாதம் செய்த அப்பெண், உடனடியாக வீட்டிற்குச் சென்று தனது தந்தையிடம் நடந்த அனைத்தையும் கூறியுள்ளார். மகளின் பக்கமிருந்த நியாயத்தைப் புரிந்துகொண்ட தந்தை, அவரை அழைத்துக்கொண்டு நேராகத் திருக்கனூர் காவல் நிலையத்திற்குச் சென்று அதிகாரப்பூர்வமாகப் புகார் அளித்தார்.

பதுங்கிய உரிமையாளர் கைது
புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் ராஜ்குமார் உடனடியாக வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினார். காவல் நிலையத்திற்குப் புகார் சென்றதை அறிந்த பிரசாந்த் தலைமறைவானார். இருப்பினும், தீவிரத் தேடுதல் வேட்டை நடத்திய திருக்கனூர் காவல்துறையினர், அப்பகுதியில் பதுங்கியிருந்த பிரசாந்த்தைப் மடக்கிப் பிடித்து அதிரடியாகக் கைது செய்தனர். ஆரோக்கியத்தைத் தேடி வந்த பெண்ணிடம் அச்சத்தை ஏற்படுத்தி ரூ. 50 லட்சம் பறிக்க முயன்ற ஜிம் உரிமையாளரின் இந்த கொடூர செயல், புதுச்சேரி மக்களிடையே பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

மருமகனை சயனைடு வைத்துக் கொன்று குடும்பத்தையே மிரட்டிய கொடூரன்: காக்கிநாடா வழக்கில் பிடிபட்ட அதிர்ச்சி உண்மை!

MUST READ