முக்கியத்துவம்: மாண்புமிகு முதலமைச்சர் விஜய் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்து
சென்னை தரமணியில் அதிநவீன திறன் மையம் ஒன்றை அமைப்பதற்காக, அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் முன்னணி நிறுவனமான ‘வால்கிரீன்ஸ்’ (Walgreens) தமிழக அரசுடன் அதிகாரப்பூர்வ புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் விஜய் அவர்களின் முன்னிலையில் இந்த முக்கிய ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன் மூலம் தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் உயர்தரப் பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டு நடவடிக்கைகள் தரமணியில் செயல்படுத்தப்பட உள்ளன.
சர்வதேச நிறுவனம் ஒன்றுடன் தமிழக அரசு செய்துள்ள இந்த ஒப்பந்தம், மாநிலத்தின் தொழில்நுட்ப மற்றும் வேலைவாய்ப்பு வளர்ச்சிக்கு மேலும் வலு சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாணவர் பாரதிதாசனுக்கு கல்வி உதவித்தொகை வழங்கத் தயக்கம் ஏன்? – கனிமொழி எம்.பி கடும் கேள்வி!
