Homeசெய்திகள்சினிமாபாரிஸ் பேஷன் வீக்கில் ராயல் லுக்கில் கலக்கிய ஐஸ்வர்யா ராய்.. செலின் டியானுடன் உற்சாக நடனம்!

பாரிஸ் பேஷன் வீக்கில் ராயல் லுக்கில் கலக்கிய ஐஸ்வர்யா ராய்.. செலின் டியானுடன் உற்சாக நடனம்!

-

- Advertisement -

பாரிஸ் பேஷன் வீக் நிகழ்ச்சியில் நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன் தனது பிரம்மாண்டமான தோற்றத்தால் கவனம் ஈர்த்துள்ளார். செப்டம்பர் 28-ம் தேதி பாரிஸில் நடைபெற்ற L’Oréal Paris-ன் ‘Le Défilé’ நிகழ்ச்சியில் அவர் ரேம்பில் நடந்து அசத்தினார்.

we-r-hiring

ஈபிள் டவரை பின்னணியாகக் கொண்டு நடைபெற்ற இந்த பிரம்மாண்ட பேஷன் நிகழ்ச்சியில், ஐஸ்வர்யா ராய் ராயல் தோற்றத்தில் காட்சியளித்தார். கருப்பு நிற வெல்வெட் ஆடை மற்றும் கிரிஸ்டல் அலங்காரத்துடன் கூடிய கேப் அணிந்திருந்த அவர், தனது புதிய சிவப்பு நிற தலைமுடி தோற்றத்தாலும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

ரேம்பில் முன்னணி பிரபலங்களுடன் ஐஸ்வர்யா ராய்

L’Oréal Paris நிறுவனத்தின் நீண்டகால உலகளாவிய தூதராக இருந்து வரும் ஐஸ்வர்யா ராய், இந்த ஆண்டின் ‘Walk Your Worth’ என்ற கருப்பொருளில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

இந்த நிகழ்ச்சியில் கெண்டல் ஜென்னர், ஈவா லாங்கோரியா, சிமோன் ஆஷ்லி, வயோலா டேவிஸ், ஜேன் ஃபோண்டா மற்றும் செலின் டியான் உள்ளிட்ட சர்வதேச பிரபலங்களும் கலந்து கொண்டனர். ஐஸ்வர்யா ராய் கெண்டல் ஜென்னருடன் இணைந்து ரேம்பில் தோன்றிய காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டன.

செலின் டியானுடன் உற்சாக நடனம்

நிகழ்ச்சியின் முக்கியமான தருணமாக ஐஸ்வர்யா ராய் மற்றும் பிரபல பாடகி செலின் டியான் சந்தித்த காட்சி அமைந்தது. இருவரும் ஒருவரை ஒருவர் அன்புடன் கட்டித்தழுவி, முத்தமிட்டு வாழ்த்திக்கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து இருவரும் கைகளைப் பிடித்துக்கொண்டு மேடையில் உற்சாகமாக நடனமாடினர். இந்த எதிர்பாராத நடனக் காட்சி தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றன.

வைரலாகும் புகைப்படங்கள்

ஐஸ்வர்யா ராயின் ராயல் லுக், ரேம்ப் வாக் மற்றும் செலின் டியானுடனான உற்சாகமான தருணங்கள் தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் இணையத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.

ஐஸ்வர்யா ராயின் தோற்றம் மற்றும் ரேம்ப் வாக் குறித்து ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பல்வேறு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். பாரிஸ் பேஷன் வீக்கில் அவரது இந்த பங்கேற்பு, சர்வதேச பேஷன் அரங்கில் அவர் தொடர்ந்து கவனம் பெறுவதை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது.

லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட SWAN Academy லோகோ.. எழுத்தாளர்களுக்காக தொடங்கப்பட்ட புதிய முயற்சி!

MUST READ