Homeசெய்திகள்க்ரைம்மாங்காட்டில் மனைவி வேறு ஒருவருடன் பேசியதால் ஆத்திரம்.. இறைச்சி வெட்டும் கத்தியால் மனைவியை சரமாரியாக வெட்டிக்...

மாங்காட்டில் மனைவி வேறு ஒருவருடன் பேசியதால் ஆத்திரம்.. இறைச்சி வெட்டும் கத்தியால் மனைவியை சரமாரியாக வெட்டிக் கொன்ற கணவன் கைது!

-

- Advertisement -

மாங்காடு அருகே அதிர்ச்சி சம்பவம்
மாங்காடு அடுத்த பட்டூர் பகுதியில், மனைவி வேறு ஒருவருடன் செல்போனில் பேசியதாக ஏற்பட்ட தகராறில், கணவன் இறைச்சி வெட்டும் கத்தியால் மனைவியை வெட்டிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மாங்காட்டில் மனைவி வேறு ஒருவருடன் பேசியதால் ஆத்திரம்.. இறைச்சி வெட்டும் கத்தியால் மனைவியை சரமாரியாக வெட்டிக் கொன்ற கணவன் கைது!

8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம்
பட்டூர் பகுதியைச் சேர்ந்த முஜைதீன் (30), இறைச்சிக் கடையில் வேலை செய்து வந்துள்ளார். இவரது மனைவி சோபியா (26). இருவருக்கும் சுமார் 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில், 7 வயதில் ஒரு மகன் உள்ளதாக கூறப்படுகிறது.

we-r-hiring

செல்போனில் பேசியதால் தகராறு
இந்த நிலையில், சோபியா வேறு ஒரு நபருடன் செல்போனில் பேசி பழகி வந்ததாக கூறப்படுகிறது. இதனை முஜைதீன் கண்டித்ததாகவும், அதனை பொருட்படுத்தாமல் சோபியா தொடர்ந்து அந்த நபருடன் பேசி வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.

ஆத்திரத்தில் கத்தியால் தாக்குதல்
நேற்று இரவும் கணவன், மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த முஜைதீன், இறைச்சி வெட்டும் கத்தியால் சோபியாவை சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த சோபியா சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிகிறது.

கொலை செய்துவிட்டு தப்பியோட்டம்
மனைவியை கொலை செய்த பின்னர் முஜைதீன் அங்கிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்ததும், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் சோபியாவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கணவன் கைது – போலீசார் விசாரணை
இதையடுத்து தலைமறைவாக இருந்த முஜைதீனை போலீசார் கைது செய்தனர். சம்பவம் தொடர்பாக அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. குடும்பத் தகராறு கொலையில் முடிந்த சம்பவம் மாங்காடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்ஸ்டாகிராம் மோதலில் அதிர்ச்சி! – அம்பத்தூர் ரயில் நிலையத்தில் பட்டாக்கத்திகளுடன் சுற்றிய 17 ஐடிஐ மாணவர்கள் கைது; பெரும் கொலை முயற்சி முறியடிப்பு!

MUST READ