Homeசெய்திகள்சென்னைதாம்பரம்-கடற்கரை மின்சார ரயில் தடம் புரண்டது: சேவை பாதிப்பு

தாம்பரம்-கடற்கரை மின்சார ரயில் தடம் புரண்டது: சேவை பாதிப்பு

-

- Advertisement -

சென்னை கோட்டை ரயில் நிலையத்தில் தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கி சென்ற புறநகர் மின்சார ரயிலின் ஒரு பெட்டி தண்டவாளத்தை விட்டு விலகி தடம் புரண்டது. ரயிலின் 5-வது பெட்டியின் சக்கரம் தடம் புரண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

we-r-hiring

ரயில் சேவை பாதிப்பு

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து தாம்பரம் – சென்னை கடற்கரை இடையிலான புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக பாதிக்கப்பட்டது. தாம்பரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கடற்கரை நோக்கி வந்த சில ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

பூங்கா ரயில் நிலையத்தில் இருந்து இயக்கம்

ரயில் சேவை பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு நோக்கி செல்லும் ரயில்கள் சென்னை பூங்கா ரயில் நிலையத்தில் இருந்து தற்காலிகமாக இயக்கப்பட்டு வருகின்றன. சில ரயில்கள் எழும்பூர் வழியாகவும் இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீரமைப்பு பணிகள் தீவிரம்

தடம் புரண்ட மின்சார ரயில் பெட்டியை மீண்டும் தண்டவாளத்தில் நிலைநிறுத்தி சீரமைக்கும் பணியில் தெற்கு ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். ரயில் தடம் புரண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

தொடர் விடுமுறை முடிந்து சென்னைக்கு பொதுமக்கள் திரும்பியுள்ள நிலையில், முக்கியமான புறநகர் ரயில் வழித்தடத்தில் ஏற்பட்ட இந்த பாதிப்பால் பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

2023-ல் விபத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்ட நடிகர் சரண்: நண்பர்களே காரை ஏற்றி கொலை செய்ததாக 3 ஆண்டுகளுக்கு பிறகு அம்பலம்!

MUST READ