மு. மாறன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘அப்பா குட்டி’. இப்படத்தில் விஜய் ஆண்டனியுடன் பேபி லிதன்யா, பிரீத்தி அஸ்ரானி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.


அப்பா – மகள் உறவை மையமாகக் கொண்டு ஆக்ஷன் கலந்த குடும்பத் திரைப்படமாக உருவாகி வரும் ‘அப்பா குட்டி’ படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைப்பதுடன், படத்தொகுப்புப் பணிகளையும் மேற்கொள்கிறார். அவர் படத்தொகுப்பாளராகப் பணியாற்றும் ஏழாவது திரைப்படம் இதுவாகும்.
ஏற்கனவே இப்படம் அக்டோபர் 16-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், படத்தின் புதிய வெளியீட்டுத் தேதியைப் படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, ‘அப்பா குட்டி’ திரைப்படம் நவம்பர் 6-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
“இந்த கார்த்திக் சுப்பராஜைத்தான் தேடிட்டு இருந்தேன்” – ரஜினிகாந்த் பாராட்டு!
