Homeசெய்திகள்மாவட்டம்25 ஆண்டுகளாக மின்சார வசதியின்றி தவிக்கும் 30-க்கும் மேற்பட்ட குடும்பங்கள்! – மின் இணைப்பு கோரி...

25 ஆண்டுகளாக மின்சார வசதியின்றி தவிக்கும் 30-க்கும் மேற்பட்ட குடும்பங்கள்! – மின் இணைப்பு கோரி சாலை மறியல்

-

- Advertisement -

காஞ்சிபுரத்தில் கடந்த 25 ஆண்டுகளாக வீட்டு மின் இணைப்பு இல்லாமல் தவித்து வரும் 30-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், தங்களுக்கு மின் இணைப்பு வழங்கக் கோரி கீழ்கதிர்பூர் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

we-r-hiring

25 ஆண்டுகளாக மின் இணைப்பு இல்லை!

காஞ்சிபுரம் மாநகராட்சியின் 11-வது வார்டுக்கு உட்பட்ட பிள்ளையார்பாளையம், கன்னியம்மன் கோவில் திருவேகம்பன் தெருவில் 30-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கடந்த 25 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர்.

இப்பகுதி மக்கள் தங்களது வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை கோரிக்கை மனுக்களை அளித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

வீட்டு வரி செலுத்தியும் மின் இணைப்பு இல்லை எனப் புகார்!

தாங்கள் முறையாக வீட்டுவரி உள்ளிட்ட வரிகளைச் செலுத்தி வருவதாகவும், கடந்த நான்கு ஆண்டுகளாக தங்கள் பகுதியில் தெருவிளக்கு வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், வீடுகளுக்கு மட்டும் மின் இணைப்பு வழங்கப்படாததால் பல ஆண்டுகளாகப் பெரும் சிரமங்களைச் சந்தித்து வருவதாக அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

உறுதி அளிக்கும் வரை போராட்டம் தொடரும்!

தங்களது நீண்டகாலக் கோரிக்கையை நிறைவேற்றி, வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மின் இணைப்பு வழங்கப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தால் மட்டுமே சாலை மறியலைக் கைவிடுவோம் என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

25 ஆண்டுகளாக மின் இணைப்பு இன்றி தவித்து வருவதாகக் கூறும் குடும்பங்களின் கோரிக்கைக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எப்போது தீர்வு காண்பார்கள் என்ற எதிர்பார்ப்பு அப்பகுதியில் எழுந்துள்ளது.

பரனூர் சுங்கச்சாவடியில் 140 ஊழியர்கள் பணி நீக்கம்! MLFF முறைக்கு எதிராகத் தர்ணா போராட்டம்

MUST READ