spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்விளையாட்டுபிளே ஆஃப் சுற்றில் நுழைந்துள்ள அணிகள் குறித்த விரிவான தகவல்!

பிளே ஆஃப் சுற்றில் நுழைந்துள்ள அணிகள் குறித்த விரிவான தகவல்!

-

- Advertisement -

 

பிளே ஆஃப் சுற்றில் நுழைந்துள்ள அணிகள் குறித்த விரிவான தகவல்!
File Photo

டாடா ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில், நேற்றுடன் (மே 21) லீக் போட்டிகள் நிறைவடைந்த நிலையில், பிளே ஆஃப் சுற்றுக்கு குஜராத், சென்னை, லக்னோ, மும்பை அணிகள் முன்னேறியுள்ளனர்.

we-r-hiring

திருமணம் நடைபெற நான்கு நாட்கள் உள்ள நிலையில் மணமகன் தற்கொலை

புள்ளிகள் பட்டியலில் குஜராத் டைட்டன்ஸ் அணி 20 புள்ளிகளுடன் முதலிடத்திலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 17 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி 17 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும், மும்பை இந்தியன்ஸ் அணி 16 புள்ளிகளுடன் நான்காவது இடத்திலும் உள்ளன.

முதல் இரண்டு இடங்களைப் பிடித்ததன் அடிப்படையில், பிளே ஆஃப் சுற்றின் முதலாவது குவாலிஃபயரில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. வரும் மே 23- ஆம் தேதி அன்று இரவு 07.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்த போட்டி நடைபெறுகிறது.

வெளி மாநிலத்தில் கொலை செய்துவிட்டு தமிழகத்தில் சடலத்தை எரித்து வீசி சென்ற சம்பவம்

மே 24- ஆம் தேதி சேப்பாக்கத்தில் நடைபெறும் எலிமினேட்டர் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

 

MUST READ