spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாநெருங்கிய நண்பனின் இழப்பால் வாடும் ரஜினி... சரத் பாபுவுக்கு மனமுடைந்து இரங்கல்!

நெருங்கிய நண்பனின் இழப்பால் வாடும் ரஜினி… சரத் பாபுவுக்கு மனமுடைந்து இரங்கல்!

-

- Advertisement -

நடிகர் சரத்பாபு மறைவுக்கு ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர் சரத் பாபு. இவர் 1971 ஆம் ஆண்டு பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான ‘பட்டினப்பிரவேசம்’ என்ற படத்தின் மூலம் திரை உலகிற்கு அறிமுகமானவர்.

we-r-hiring

இவர் நிழல் நிஜமாகிறது, உதரிப்புக்கள், நெஞ்சத்தைக் கிள்ளாதே, முள்ளும் மலரும்,நினைத்தாலே இனிக்கும், நெற்றிக்கண், ஆளவந்தான்,பாபா, அண்ணாமலை, முத்து உள்ளிட்ட 200 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளில் நடித்துள்ளார்.

சரத்பாபு சில வாரங்களுக்கு முன்பே கல்லீரல் சம்பந்தப்பட்ட பிரச்சனையால் உடல்நிலை சரியில்லாமல் பெங்களூரில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். மீண்டும் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று மதியம் உயிரிழந்தார். அவருக்கு வயது 71. நடிகர் சரத்பாபுவின் மறைவிற்கு திரைத்துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கமல்ஹாசன், கேஎஸ் ரவிக்குமார், இயக்குனர் வாசு, சுரேஷ் கிருஷ்ணா உள்ளிட்ட பலரும் சரத்பாபுவின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.  இந்நிலையில் ரஜினி அவரின் மறைவுக்கு தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

“இன்று என்னுடைய நெருங்கிய நண்பர், அருமையான மனிதர் சரத்பாபுவை நான் இழந்திருக்கிறேன். இது ஈடுகட்ட முடியாத இழப்பு. அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும்.” என்று தெரிவித்துள்ளார்.

ரஜினி, சரத் பாபு இருவரும் இணைந்து அண்ணாமலை, முத்து, முள்ளும் மலரும் உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

MUST READ