Homeசெய்திகள்மாவட்டம்நத்தம் அருகே பணம் வைத்து சேவல் சண்டை சூதாட்டம்! போலீசார் வருவதை அறிந்து தப்பியோட்டம் –...

நத்தம் அருகே பணம் வைத்து சேவல் சண்டை சூதாட்டம்! போலீசார் வருவதை அறிந்து தப்பியோட்டம் – 20-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் பறிமுதல்!

-

- Advertisement -

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே பணம் வைத்து சேவல் சண்டை சூதாட்டத்தில் ஈடுபட்ட நபர்கள், போலீசார் வருவதை அறிந்து தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்கிருந்து 20-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

we-r-hiring

சொரிப்பாறைப்பட்டியில் சேவல் சண்டை சூதாட்டம்!

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் சொரிப்பாறைப்பட்டி பகுதியில் பணம் வைத்து சேவல் சண்டை நடத்தி பலர் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

சிங்கம்புணரி, கொட்டாம்பட்டி, மணப்பாறை, பொன்னமராவதி, திண்டுக்கல் மற்றும் நத்தம் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் சேவல்களைக் கொண்டு வந்து, பணம் கட்டி இந்தச் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

போலீசார் வருவதை அறிந்து தப்பியோட்டம்!

சொரிப்பாறைப்பட்டி பகுதியில் சேவல் சண்டை சூதாட்டம் நடைபெறுவது குறித்து நத்தம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, நத்தம் இன்ஸ்பெக்டர் பொன் குணசேகரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்றனர். போலீசார் வருவதை அறிந்த அங்கிருந்த 20-க்கும் மேற்பட்ட நபர்கள் உடனடியாக தப்பி ஓடினர்.

இந்தச் சூதாட்டத்தை அதே பகுதியைச் சேர்ந்த சின்னக்கருப்பன் மகன் தமிழ் (30), கண்ணன் (35) உள்ளிட்ட பலர் இணைந்து நடத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. அவர்களும் போலீசாரைக் கண்டதும் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.

20-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் பறிமுதல்!

சூதாட்டத்தில் ஈடுபட்ட நபர்கள் தாங்கள் கொண்டு வந்த 20-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களை சம்பவ இடத்திலேயே விட்டுச் சென்றனர்.

இதையடுத்து, அந்த வாகனங்களைப் பறிமுதல் செய்த போலீசார், இரண்டு லாரிகளில் ஏற்றி நத்தம் காவல் நிலையத்திற்குக் கொண்டு வந்தனர்.

தப்பியோடிய நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு!

சேவல் சண்டை சூதாட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் தமிழ், கண்ணன் உள்ளிட்டவர்களையும், பந்தயத்தில் கலந்து கொண்டு தப்பியோடிய மற்ற நபர்களையும் நத்தம் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

நத்தம் அருகே நடைபெற்ற இந்தச் சேவல் சண்டை சூதாட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு காலில் நின்றபடி 50 வகையான யோகாசனங்கள்! கோவை மாணவி சஞ்சனா உலக சாதனை படைத்து அசத்தல்!

MUST READ