Homeசெய்திகள்சினிமாவில்லனாக நடிக்க தயார் .... நடிகர் சூர்யா கொடுத்த லேட்டஸ்ட் அப்டேட்!

வில்லனாக நடிக்க தயார் …. நடிகர் சூர்யா கொடுத்த லேட்டஸ்ட் அப்டேட்!

-

- Advertisement -

நடிகர் சூர்யா லேட்டஸ்ட் அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார்.வில்லனாக நடிக்க தயார் .... நடிகர் சூர்யா கொடுத்த லேட்டஸ்ட் அப்டேட்!

தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் சூர்யா தற்போது சீன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் வருகின்ற நவம்பர் 6ஆம் தேதி திரைக்கு வரும் முழு வீச்சில் தயாராகி வருகிறது. அதே சமயம் இந்த படம் தொடர்பான விழா மேடையில் பேசிய சூர்யா புதிய அப்டேட் ஒன்றை கொடுத்து ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார். இது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதாவது நடிகர் சூர்யா ஏற்கனவே இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த விக்ரம் திரைப்படத்திலிருந்து ரோலக்ஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். கிளைமாக்ஸ்-ல் சில நிமிடங்கள் மட்டுமே இடம்பெறும் இவருடைய காட்சியை திரையரங்கையே அதிர வைத்தது. எனவே மீண்டும் லோகேஷ் – சூர்யா கூட்டணி இணையுமா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. வில்லனாக நடிக்க தயார் .... நடிகர் சூர்யா கொடுத்த லேட்டஸ்ட் அப்டேட்!இந்நிலையில் நடிகர் சூர்யா இது தொடர்பான புதிய அப்டேட்டை கொடுத்துள்ளார். அதன்படி அவர், தான் லோகேஷ் இயக்கத்தில் நடிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், இதற்கான பணிகள் பல்வேறு கட்டங்களைக் கடந்து தீவிரமாக நடந்து வருவதாகவும் சூர்யா வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, இயக்குநரிடம் இதுகுறித்துத் தான் தொடர்ந்து பேசி வருவதாகவும், தன்னைத் தொடர்புகொண்டு உடனடியாகச் சந்திக்குமாறு லோகேஷிடம் சொல்லுங்கள் என்று மேடையில் ரசிகர்களிடம் சிரித்தபடி பேசியுள்ளார். மேலும், இந்தச் கூட்டணியில் தான் நாயகனாக நடிக்க வேண்டுமா? அல்லது வில்லனாக நடிக்க வேண்டுமா? என்ற சுவாரஸ்யமான கேள்வியையும் அவர் எழுப்பியுள்ளார்.

we-r-hiring

தற்போதைய காலகட்டத்தில் பல முன்னணி நாயகர்கள் வந்துவிட்டதால், அதற்குப் பதிலாக ஒரு வித்தியாசமான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தால் என்ன என்ற யோசனையையும் அவர் முன்வைத்துள்ளார். இந்தச் சுவாரஸ்யமான பேச்சுவார்த்தைகள் மற்றும் திட்டங்கள் உறுதியானால், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூர்யா இணையக்கூடிய அடுத்தடுத்த படங்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ