கோவை காந்திபுரத்தில் ரூ.400 கோடி மதிப்பில் பெரியார் நூலகம் அமைக்கும் பணிகள் கடந்த 2024ஆம் ஆண்டு திமுக ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்டன.


சுமார் 1.98 லட்சம் சதுர அடி பரப்பளவில் தரைத்தளம் மற்றும் ஏழு தளங்களுடன் இந்த நூலகம் கட்டப்பட்டுள்ளது.
இந்த நூலகத்தில் 356 இருக்கைகள் கொண்ட நவீன கலையரங்கம், மாற்றுத்திறனாளிகளுக்கான தனி நூலகப் பிரிவு, 90 இருக்கைகள் கொண்ட கோளரங்கம், விண்வெளிப் பயண அனுபவத்தை வழங்கும் மின்தூக்கி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், வரவேற்பறை, அறிவியல் மையம், குழந்தைகள் நூலகம், வாசகர்கள் தங்களது சொந்தப் புத்தகங்களைக் கொண்டு வந்து படிப்பதற்கான தனிப் பிரிவு ஆகியவையும் இடம்பெற்றுள்ளன.
இந்தப் பெரியார் நூலகத்தை கடந்த அக்டோபர் 16ஆம் தேதி முதலமைச்சர் விஜய் திறந்து வைத்தார்.
இந்த நிலையில், தான் முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில் கட்டப்பட்ட பெரியார் நூலகத்தை முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
