
சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா இன்று (மே 24) பணி ஓய்வுப் பெறுகிறார்.

இறுதிப்போட்டிக்கு முன்னேறியது சென்னை சூப்பர் கிங்ஸ்!
சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த முனீஸ்வர்நாத் பண்டாரி, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 12- ஆம் தேதி பணி ஓய்வுப் பெற்றதை அடுத்து, மூத்த நீதிபதியாக இருந்த டி.ராஜா பொறுப்பு தலைமை நீதிபதியாகப் பதவியேற்றார்.
எட்டு மாதங்களாக இந்த பதவியில் உள்ள அவர், 62 வயது நிறைவடைவதையொட்டி, இன்றுடன் (மே 24) ஓய்வுப் பெறவுள்ளார். அவருக்கு உயர்நீதிமன்ற வளாகத்தில் இன்று மாலை பிரிவு உபச்சார விழா நடைபெறவுள்ளது.
“ஓய்வு பெறுவது குறித்து இதுவரை முடிவெடுக்கவில்லை”- கேப்டன் தோனி பேட்டி!
விழாவில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள், மூத்த வழக்கறிஞர்கள் மற்றும் பல்வேறு முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர்.
புதிய தலைமை நீதிபதி நியமிக்கப்படும் வரை அவருக்கு அடுத்த இடத்தில் உள்ள மூத்த நீதிபதியான வைத்தியநாதன், சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்படுவார் என்று தெரிகிறது.