Homeசெய்திகள்சினிமா'டெர்மினேட்டர்' பட பாணியில் 'மூக்குத்தி அம்மன் 2' ... சுவாரஸ்ய ரகசியங்களை பகிர்ந்த சுந்தர். சி!

‘டெர்மினேட்டர்’ பட பாணியில் ‘மூக்குத்தி அம்மன் 2’ … சுவாரஸ்ய ரகசியங்களை பகிர்ந்த சுந்தர். சி!

-

- Advertisement -

இயக்குனர் சுந்தர். சி, மூக்குத்தி அம்மன் 2 படம் குறித்த சில தகவல்களை பகிர்ந்துள்ளார்.'டெர்மினேட்டர்' பட பாணியில் 'மூக்குத்தி அம்மன் 2' ... சுவாரஸ்ய ரகசியங்களை பகிர்ந்த சுந்தர். சி!

​இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில், நயன்தாரா, ஊர்வசி, ரெஜினா, யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ள ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படம் வரும் நவம்பர் 6-ஆம் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது. அதற்கான டிக்கெட் முன்பதிவுகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அதேசமயம் இந்த படத்தின் ப்ரோமோஷன் பணிகளும் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் படத்தைப் பற்றிய சுவாரஸ்யங்களை இயக்குநர் சுந்தர்.சி பகிர்ந்துகொண்டார்.
​”டெர்மினேட்டர் படத்தில் எதிர்காலத்திலிருந்து ஒரு ரோபோ வரும். அதுவே கடந்த காலத்திலிருந்து ஒரு கதாபாத்திரம் வந்தால் எப்படி இருக்கும்? ஐசரி கணேஷ் சார் இரண்டாம் பாகம் பண்ண சொன்னப்போதான் இந்த யோசனை வந்தது. இந்த ஐடியாவை ஏன் அம்மன் கதையோடு இணைக்கக் கூடாதுன்னு யோசிச்சேன். இப்போ கண்டிப்பா முதல் பாகத்தோட ஒப்பீடுகள் வரத்தான் செய்யும்.'டெர்மினேட்டர்' பட பாணியில் 'மூக்குத்தி அம்மன் 2' ... சுவாரஸ்ய ரகசியங்களை பகிர்ந்த சுந்தர். சி! நான் அரண்மனை படத்தின் 4 பாகங்களை எடுத்திருக்கேன், ஆனா திரைக்கதை அமைப்பைத் தவிர வேற எதுவுமே ஒரே மாதிரி இருக்காது. அதேபோல ஒவ்வொரு பாகமும் அதோட முந்தைய பாகத்தை விட அதிக வசூல் செஞ்சிருக்கு. இருந்தாலும் சிலர் இந்த பாகம் முந்தைய பாகம் மாதிரி இல்லைன்னு சொன்னாங்க. ஒருவேளை மூக்குத்தி அம்மன் 2 படத்துக்கும் அதே மாதிரியான விமர்சனங்கள் வரலாம். நான் என் மேல பிரஷர் ஏத்திக்கிற மாதிரி தெரியலாம். ஆனா விஷயங்கள் இப்படித்தான் நடக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

MUST READ