Homeசெய்திகள்சினிமாரன்பீர் கபூர் - சாய் பல்லவியின் 'ராமாயணா'... ட்விட்டர் விமர்சனம் இதோ!

ரன்பீர் கபூர் – சாய் பல்லவியின் ‘ராமாயணா’… ட்விட்டர் விமர்சனம் இதோ!

-

- Advertisement -

ராமாயணா படத்தின் ட்விட்டர் விமர்சனம் வெளியாகி உள்ளது.ரன்பீர் கபூர் - சாய் பல்லவியின் 'ராமாயணா'... ட்விட்டர் விமர்சனம் இதோ!

இந்திய திரையுலகமே பல மாதங்களாக ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த நிதேஷ் திவாரி இயக்கத்திலான ‘ராமாயணா’ திரைப்படம் இன்று (நவம்பர் 5) திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகியுள்ளது. ராமனாக ரன்பீர் கபூர், சீதையாக சாய் பல்லவி மற்றும் இராவணனாக யாஷ் நடித்துள்ள இத்திரைப்படம், அதன் விஷுவல் எஃபெக்ட்ஸ் மற்றும் நட்சத்திரப் பட்டாளத்திற்காகவே ஆரம்பத்திலிருந்தே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.
தற்போது திரையரங்குகளில் படம் வெளியாகி இருக்கும் நிலையில், சினிமா பிரியர்களும், ரசிகர்களும் சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் தங்கள் விமர்சனங்களைப் பகிர்ந்து வருகின்றனர்.

we-r-hiring

அந்த வகையில் ரசிகர் ஒருவர், “மாபெரும் பிரம்மாண்டமான விஷுவல் எக்ஸ்பீரியன்ஸ்! அசத்தலான விஷுவல்ஸ் மற்றும் மேக்கிங். ரன்பீர் கபூர் மற்றும் சாய் பல்லவி, ராமன் – சீதையாக நேர்த்தியாக நடித்துள்ளார்கள். ஆனால் இராவணனாக வரும் யாஷ் தனது மிரட்டலான ஸ்கிரீன் பிரசன்ஸால் ஒட்டுமொத்த கவனத்தையும் ஈர்க்கிறார். முதல் ஒரு மணி நேரம் பிரமிப்பூட்டும் விஷுவல்ஸ் மற்றும் VFX காட்சிகளுடன் அதிரடி ஆக்‌ஷனாக நகர்கிறது. உயர்தரமான தயாரிப்பு மதிப்பீடு மற்றும் மேக்கிங். அதற்குப் பிறகு, இடைவேளை வரை படம் டிராமா மோடிற்குச் செல்கிறது. படத்தின் ரன்டைம் சற்றே நீளமாக உணர வைக்கிறது. மேலும் சில டிராமா காட்சிகள் மெதுவாக நகர்கின்றன. இராவணன் என்ட்ரி சீன் மற்றும் அரக்கர்களுடனான சண்டைக் காட்சி தான் முதல் பாதியின் மிக முக்கிய ஹைலைட்ஸ். இதுவரை ஒரு நேர்த்தியான விஷுவல் எக்ஸ்பீரியன்ஸ், இனி இரண்டாம் பாதியை நோக்கி நகர்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

மற்றுமொரு ரசிகர், “ட்ராமாயணா (Drama’yana)!!”

“சிறப்பம்சங்கள்: பிரம்மாண்டமான VFX, மேக்கிங், மிரட்டலான யாஷ் காட்சிகள் & ஜடாயு சண்டைக் காட்சி! .. இசை, ரன்பீர், ராமன்-சீதா உணர்ச்சிப்பூர்வ காட்சிகள், சுவாரஸ்யமில்லாத கதை/டிராமா, நீளமான ரன்டைம் ஆகியவை படத்தின் பின்னடைவுகள்” மொத்தத்தில்
“ஆவரேஜ் (AVERAGE)!” என்று தனது விமர்சனத்தை பகிர்ந்துள்ளார்.

MUST READ