ஒருவரைக் கைது செய்த 24 மணி நேரத்திற்குள் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான காலக்கெடு, அவர் கைது செய்யப்படும் அடுத்த நொடியிலிருந்தே தொடங்கிவிடும் என்றும் நீதிபதிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

வழக்குகளில் கைது செய்யப்படும் நபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவது தொடர்பான விவகாரத்தை விசாரித்த நீதிபதிகள், கைது செய்யப்பட்டவரின் தனிநபர் சுதந்திரத்தைப் பாதுகாப்பது அவசியம் என்பதைச் சுட்டிக்காட்டினர்.
மேலும், காவல்துறையினர் ஒருவரைத் தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதும் அவரது தனிநபர் சுதந்திரத்தைப் பாதிக்கும் செயலாகும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
எனவே, ஒருவரைக் கைது செய்த பிறகு 24 மணி நேரத்திற்குள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்ற சட்ட நடைமுறையை முறையாகப் பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களின் உரிமைகள் மற்றும் தனிநபர் சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் வகையில் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ள இந்த உத்தரவு முக்கியத்துவம் பெற்றுள்ளது.
