சென்னை காசிமேட்டில் இருந்து மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்ற 9 மீனவர்கள் மாயமான நிலையில், ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் கோத்தப்பட்டினம் அருகே 8 சடலங்கள் கரை ஒதுங்கியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கரை ஒதுங்கிய சடலங்கள் மாயமான சென்னை மீனவர்களுடையதா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே, தமிழ்நாட்டில் இருந்து மீன்வளத்துறை உதவி இயக்குநர் மற்றும் அதிகாரிகள் அடங்கிய குழுவினர் ஆந்திர மாநிலத்திற்கு விரைந்துள்ளனர். அங்கு கரை ஒதுங்கியுள்ள சடலங்களை அடையாளம் காண்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மாயமான 9 மீனவர்களில் 8 பேர் உயிரிழந்திருக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ள நிலையில், எஞ்சிய ஒரு மீனவரின் நிலை குறித்தும் தகவல் எதிர்பார்க்கப்படுகிறது. சடலங்கள் அடையாளம் காணப்பட்ட பின்னரே அவை காசிமேட்டில் இருந்து சென்ற மீனவர்களுடையதா என்பது உறுதி செய்யப்படும்.
