Homeசெய்திகள்சென்னைதிருமணம் செய்வதாகக் கூறி மாடல் அழகியிடம் ரூ.10 லட்சம் மோசடி – பேஷன் அழகிப் போட்டி...

திருமணம் செய்வதாகக் கூறி மாடல் அழகியிடம் ரூ.10 லட்சம் மோசடி – பேஷன் அழகிப் போட்டி சங்கத் தலைவர் மீது புகார்!

-

- Advertisement -

சினிமாவில் வாய்ப்பு தருவதாகப் பல பெண்களை ஏமாற்றியதாகவும் குற்றச்சாட்டு – போலீசார் விசாரணைதிருமணம் செய்வதாகக் கூறி மாடல் அழகியிடம் ரூ.10 லட்சம் மோசடி – பேஷன் அழகிப் போட்டி சங்கத் தலைவர் மீது புகார்!

திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி ரூ.10 லட்சம் பெற்றுக்கொண்டு மோசடி செய்ததாக, மாடலிங் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கும் நிறுவனத்தின் தலைவர் மீது மாடல் அழகி ஒருவர் புகார் அளித்துள்ளார்.திருமணம் செய்வதாகக் கூறி மாடல் அழகியிடம் ரூ.10 லட்சம் மோசடி – பேஷன் அழகிப் போட்டி சங்கத் தலைவர் மீது புகார்!

we-r-hiring

மேலும், தன்னைப் போலவே பல பெண்களிடம் சினிமா மற்றும் மாடலிங் வாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி அவர் ஏமாற்றியதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்தப் புகார் தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அம்பத்தூர் குற்றப்பிரிவு போலீசார் ஒருதலைப்பட்சமாகச் செயல்படுவதாகவும் புகார் அளித்த பெண் தெரிவித்துள்ளார்.

ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார் அளித்துள்ள மாடல் அழகி புவனேஷ்வரி, அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்தவர்.

இவர் தற்போது ‘XY’ என்ற தமிழ்த் திரைப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மாடலிங் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து வரும் ‘SIFPA’ என்ற பேஷன் நிறுவனத்தின் தலைவர் வினோத் சிரஞ்சீவி, தன்னை இன்ஸ்டாகிராம் மூலம் தொடர்புகொண்டதாகவும், தனது நிறுவனத்தின் ஃபேஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்குமாறு அழைத்ததாகவும் புவனேஷ்வரி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, கடந்த ஜனவரி மாதம் தன்னைக் காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்வதாகவும் வினோத் ஆசை வார்த்தை கூறியதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், தொழிலில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.10 லட்சம் பெற்றதாகவும் தெரிவித்துள்ளார். இதற்காகத் தனது நகைகளை விற்றும், கடன் வாங்கியும் பணம் கொடுத்ததாகக் கூறியுள்ள புவனேஷ்வரி, ஆனால் பிப்ரவரி மாதமே வினோத் வேறொரு பெண்ணை ரகசியமாகத் திருமணம் செய்து கொண்டதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.

கொடுத்த பணத்தைத் திரும்பக் கேட்டபோது அலட்சியமாகப் பேசியதுடன் மிரட்டல் விடுத்ததாகவும், கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் கடும் மன உளைச்சலில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

தன்னைப் போலவே பல பெண்களிடம் சினிமாவில் நடிக்கவும், மாடலிங் நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் வாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி வினோத் ஏமாற்றியுள்ளதாகவும் புவனேஷ்வரி புகார் தெரிவித்துள்ளார்.

மேலும், மாடலிங் துறைக்கு வரும் பெண்களிடம் ‘அட்ஜஸ்ட்மெண்ட்’ செய்ய வேண்டும் எனக் கேட்பதாகவும், தன்னிடமும் அவ்வாறு கேட்டதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

பெண்களை வேறு நபர்களுக்கு அனுப்பும் செயலிலும் வினோத் ஈடுபட்டு வருவதாகவும், இதற்கான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக ஆவடி காவல் ஆணையரகத்தில் அளிக்கப்பட்ட புகார், விசாரணைக்காக அம்பத்தூர் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில், விசாரணைக்கு ஆஜரான புவனேஷ்வரி செய்தியாளர்களிடம் பேசுகையில், அம்பத்தூர் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் வினோத்திற்கு ஆதரவாகச் செயல்படுவதாகவும், தங்கள் மீதே குற்றம் சுமத்துவதாகவும் குற்றம்சாட்டினார்.

காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் மீண்டும் ஆவடி காவல் ஆணையரைச் சந்தித்துப் புகார் அளிப்பதுடன், சட்டரீதியாக வழக்குத் தொடரப் போவதாகவும் தெரிவித்தார்.

இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், புவனேஷ்வரி அளித்த புகார் தொடர்பாக CSR பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாகத் தெரிவித்தனர். இதற்கிடையே, புகார் தொடர்பான விசாரணைக்காக ஆஜரான வினோத்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

ஆனால், அவர் பதிலளிக்காமல் அங்கிருந்து சென்றுவிட்டார். பின்னர் காவல்துறையினர் அவரைப் பாதுகாப்பாக காவல் நிலையத்திலிருந்து வெளியே அழைத்து வந்து காரில் அனுப்பி வைத்தனர்.

திருமண ஆசை காட்டி பணம் பெற்றதாகவும், பல பெண்களிடம் மோசடியில் ஈடுபட்டதாகவும் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாமனாரின் நினைவாக ரூ.1.5 கோடியில் கோவில் கட்டிய மருமகன் – நெகிழ்ச்சியில் ஆழ்த்திய பாசம்!

MUST READ