
தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காகவும், சென்னையில் அடுத்தாண்டு ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கவும் அரசுமுறைப் பயணமாக சிங்கப்பூர் சென்றுள்ளார். அதைத் தொடர்ந்து, இன்று (மே 24) காலை 10.00 மணிக்கு சிங்கப்பூரின் முன்னணி நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகளைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

13 லட்சம் மதிப்புள்ள பைக் – சக ரைடருக்கு அஜித் பரிசு
அதைத் தொடர்ந்து, இன்று மதியம் சிங்கப்பூரின் போக்குவரத்து, தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் எஸ்.ஈஸ்வரனை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது, இரு நாடுகளுக்களிடையே உள்ள பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்துவது பற்றியும், புதிய தொழில் முதலீடுகளை தமிழகத்தில் மேற்கொள்வது பற்றியும் உரையாடியதோடு, அடுத்தாண்டு சென்னையில் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளவும் அழைப்பு விடுத்தார்.
மேலும், சிங்கப்பூரைச் சேர்ந்த செம்ப்கார்ப் நிறுவனத்துடன் இணைந்து தமிழகத்தில் பசுமை சக்தியை உருவாக்கி வருவது குறித்தும் சிங்கப்பூர் அமைச்சரிடம் தெரிவித்தார்.
காதலியை கரம் பிடித்தார் எருமா சானி விஜய்
இச்சந்திப்பின் போது, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப., தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறைக் கூடுதல் செயலாளர் எஸ்.கிருஷ்ணன் இ.ஆ.ப., சிங்கப்பூர் நாட்டிற்கான இந்திய தூதர் பெரியசாமி குமரன் மற்றும் அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.