Homeசெய்திகள்மாவட்டம்தகாத முறையில் பேசுவதாக புகார் – தவெக மாவட்டச் செயலாளர் சத்யாவுக்கு எதிராக பெண் நிர்வாகிகள்...

தகாத முறையில் பேசுவதாக புகார் – தவெக மாவட்டச் செயலாளர் சத்யாவுக்கு எதிராக பெண் நிர்வாகிகள் போராட்டம்; அலுவலகம் பூட்டி எதிர்ப்பு!

-

- Advertisement -

திருவண்ணாமலை வடக்கு மாவட்ட தவெக செயலாளர் சத்யாவுக்கு எதிராக, பெண் கட்சி நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சத்யா தங்களிடம் தகாத முறையில் பேசுவதாகப் புகார் தெரிவித்துள்ள பெண் நிர்வாகிகள், ஆரணியில் உள்ள அவரது அலுவலகத்தைப் பூட்டி எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.தகாத முறையில் பேசுவதாக புகார் – தவெக மாவட்டச் செயலாளர் சத்யாவுக்கு எதிராக பெண் நிர்வாகிகள் போராட்டம்; அலுவலகம் பூட்டி எதிர்ப்பு!

பேனரில் இருந்த படத்திற்கு கருப்பு மை

we-r-hiring

சத்யாவுக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்ட பெண் நிர்வாகிகள், அங்கிருந்த பேனரில் இடம்பெற்றிருந்த அவரது புகைப்படத்தின் மீது கருப்பு மை பூசி தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தனர். மேலும், அவரது அலுவலகத்தை இழுத்துப் பூட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆரணியில் பரபரப்பு

ஆரணியில் உள்ள மாவட்டச் செயலாளர் சத்யாவின் அலுவலகம் பூட்டப்பட்டு கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பெண் நிர்வாகிகள் முன்வைத்துள்ள புகார் தொடர்பாக கட்சித் தலைமை என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சத்யா மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக அவரது தரப்பு விளக்கம் வெளியாகவில்லை.

துரிஞ்சலாற்றில் குதித்து அரசு மருத்துவக் கல்லூரி பெண் மருத்துவர் உயிரிழப்பு – தீயணைப்புப் படையினர் உடலை மீட்டனர்!

MUST READ