Homeசெய்திகள்க்ரைம்மதுரை தனிஷ்க் நகைக்கடையில் மெகா கொள்ளை – 10 கிலோ தங்கம், வைரம் பதித்த நகைகள்...

மதுரை தனிஷ்க் நகைக்கடையில் மெகா கொள்ளை – 10 கிலோ தங்கம், வைரம் பதித்த நகைகள் மாயம்; 3 தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிர விசாரணை!

-

- Advertisement -

மதுரை பழங்காநத்தம் – காளவாசல் புறவழிச்சாலையில் அமைந்துள்ள பிரபல தனிஷ்க் நகைக்கடையில் நடைபெற்றுள்ள துணிகரக் கொள்ளைச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முகமூடி அணிந்த மர்ம நபர் ஒருவர் அதிகாலை நேரத்தில் கடைக்குள் புகுந்து, சுமார் 10 கிலோ தங்க நகைகள் மற்றும் வைரம் பதித்த தங்க நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.மதுரை தனிஷ்க் நகைக்கடையில் மெகா கொள்ளை – 10 கிலோ தங்கம், வைரம் பதித்த நகைகள் மாயம்; 3 தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிர விசாரணை!

சம்பவம் தொடர்பாக மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரன் மேற்பார்வையில் மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

we-r-hiring

கடந்த வாரமே கொள்ளை முயற்சி?

தீபாவளி விற்பனையை முன்னிட்டு கட்டுமானப் பணிகள் முழுமையாக நிறைவடையாத நிலையிலேயே இந்த நகைக்கடை திறக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த வாரமும் இதே கடையில் முகமூடி அணிந்த மர்ம நபர் ஒருவர் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த முயற்சி தோல்வியடைந்த நிலையில், தற்போது மீண்டும் கடைக்குள் புகுந்து கொள்ளையடித்துச் சென்றிருப்பது விசாரணையில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

பின்பக்க சாரம் வழியாக உள்ளே நுழைந்த கொள்ளையன்!

நேற்று அதிகாலை சுமார் 4 மணியளவில் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர், கட்டிடத்தின் பின்பக்கத்தில் அமைக்கப்பட்டிருந்த சாரம் வழியாக மேலே ஏறி, லிப்ட் வழியாகக் கடைக்குள் நுழைந்ததாகக் கூறப்படுகிறது. கடையின் உள்பகுதியில் பாதுகாப்பு அலாரம் மற்றும் சென்சார் கருவிகள் பொருத்தப்படாத பகுதிகளைத் தெரிந்துகொண்டு, அங்கிருந்த நகைகளைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளையடித்துச் சென்றதாகத் தெரிகிறது.

கடையின் உள்புற அமைப்பு மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த விவரங்கள் கொள்ளையனுக்குத் தெரிந்திருந்ததா, கட்டுமானப் பணியாளர்கள் அல்லது கடை ஊழியர்கள் யாருக்காவது இதில் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், இதுவரை யாருடைய தொடர்பும் உறுதி செய்யப்படவில்லை.

சுமார் 10 கிலோ தங்க நகைகள் கொள்ளை!

கடைக்குள் நுழைந்த மர்ம நபர், சுமார் 10 கிலோ தங்க நகைகள் மற்றும் வைரம் பதித்த தங்க நகைகளைச் சாக்குப்பையில் எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. காலையில் கடையைத் திறக்க வந்த ஊழியர்கள், நகைப்பெட்டிகள் சிதறிக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

மூன்று தனிப்படைகள் அமைத்து தீவிர தேடுதல் வேட்டை!

சம்பவத்தின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரன் நேரடி மேற்பார்வையில் மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. கொள்ளையன் தப்பிச் சென்ற வழித்தடம், கடை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகள் ஆகியவற்றைக் கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

மேலும், திருச்சி, தேனி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களிலும், கேரளா மற்றும் வடமாநிலங்களிலும் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுங்கச்சாவடிகள், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட இடங்களிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

மதுரையின் முக்கியப் பகுதியில் அமைந்துள்ள பிரபல நகைக்கடையில் அதிகாலை நேரத்தில் நடைபெற்றுள்ள இந்தக் கொள்ளைச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொள்ளையனைக் கண்டறிந்து நகைகளை மீட்கும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

மதுரையில் தனிஷ்க் நகைக்கடையில் 500 சவரன் தங்க நகைகள் கொள்ளை – ரூ.50 கோடி மதிப்பிலான நகைகள் மாயம்!

MUST READ