Homeசெய்திகள்க்ரைம்திண்டுக்கல் அருகே இளம்பெண் படுகொலை – மனைவியின் நடத்தை குறித்து நண்பர்கள் கூறியதால் ஆத்திரத்தில் கொன்றாரா...

திண்டுக்கல் அருகே இளம்பெண் படுகொலை – மனைவியின் நடத்தை குறித்து நண்பர்கள் கூறியதால் ஆத்திரத்தில் கொன்றாரா கணவர்?

-

- Advertisement -

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே 24 வயதான சுவேதா என்பவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கொலை தொடர்பாக அவரது கணவர் அஜித்குமார் காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார்.திண்டுக்கல் அருகே இளம்பெண் படுகொலை – மனைவியின் நடத்தை குறித்து நண்பர்கள் கூறியதால் ஆத்திரத்தில் கொன்றாரா கணவர்?

காவல்துறையின் முதற்கட்ட விசாரணையின்படி, அஜித்குமார் தனது நண்பர்களுடன் மது அருந்திக் கொண்டிருந்தபோது, அவரது மனைவி சுவேதாவின் நடத்தை சரியில்லை என்று நண்பர்கள் கூறியதாகத் தெரிகிறது.

we-r-hiring

இதனால் ஏற்பட்ட தகராறு மற்றும் ஆத்திரத்தின் காரணமாக இந்தக் கொலை நடந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.

இதையடுத்து சுவேதாவைப் படுகொலை செய்ததாகக் கூறப்படும் அவரது கணவர் அஜித்குமார் காவல்துறையினரிடம் சரணடைந்துள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், கொலைக்கான முழுமையான காரணம் மற்றும் சம்பவத்தின் பின்னணி குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தீபாவளி நாளில் தமிழகத்தில் 8 கொலைகள்! 2 சிறுவர்கள் உட்பட பலி – தேனி முதல் சிவகங்கை வரை அதிர்ச்சி சம்பவங்கள்!

MUST READ