தமிழ் சினிமாவில் ஜெயிலர் 2, சீன் ஆகிய படங்களுக்கு பிறகு மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் தான் தனுஷின் ‘ஓம்’ (O.M). வருகின்ற நவம்பர் 20ஆம் தேதி திரைக்கு வர தயாராகி வரும் இந்த படத்தின் தலைப்பு ஆரம்பத்தில் ஓம் – OM என்று வைக்கப்பட்டிருந்தது. ஆனால் தணிக்கை குழு பிரச்சினை காரணமாக O.M என்று மாற்றப்பட்டுள்ளது.
இந்த திரைப்படத்தின் புரொமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. அதன்படி இந்த படத்தின் கதாநாயகிகளான சாய் பல்லவி மற்றும் ஸ்ரீலீலா ஆகியோர் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்டு பல சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டனர்.
தென்னிந்தியத் திரையுலகில் தனது துள்ளலான நடனத்திற்காகப் புகழ்பெற்றவர் நடிகை ஸ்ரீலீலா. குறிப்பாக ‘குண்டூர் காரம்’ திரைப்படத்தில் மகேஷ் பாபுவுடன் இணைந்து அவர் ஆடிய ‘குர்ச்சி மடத்தபெட்டி’ பாடல் பட்டிதொட்டியெங்கும் படுவைரலாகி மாபெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்து அடுத்தடுத்த படங்களில் பிஸியாக நடித்து வரும் ஸ்ரீலீலா, அதே போன்றதொரு அதிரடியான நடனப் பாடலைத் தமிழ் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். இந்நிலையில், இந்த நேர்காணலில் பேசிய ஸ்ரீலீலாவிடம், “தனுஷ் சாருடன் சாய் பல்லவி ஆடிய ‘ரௌடி பேபி’ பாடல் யூடியூபில் அதிக பார்வைகளைப் பெற்று சாதனை படைத்துள்ளது. ஆனால் இந்தப் படத்தில் உங்களுக்கு அவருடன் ஒரு டான்ஸ் நம்பர் இல்லையே என்று வருத்தப்படுகிறீர்களா?” என கேள்வி எழுப்பப்பட்டது.
DD: #SaiPallavi has highest viewed YouTube song RowdyBaby with #Dhanush sir, Do you feel that you don’t have a dance number with him❓
#SreeLeela: Sometimes I have to re-invent myself, i was the most excited, that #OM doesn’t have dance number
#SaiPallavi: What Rajkumar first said to me was, it don’t have dance song. Even he said the same for Amaran also
https://t.co/BbOk1PHBIz— AmuthaBharathi (@CinemaWithAB) November 14, 2026
இதற்குப் பதிலளித்த ஸ்ரீலீலா, “சில நேரங்களில் நம்மை நாமே புதிதாக மாற்றிக்கொள்ள வேண்டியது அவசியம். உண்மையில், ‘ஓ.எம்’ திரைப்படத்தில் எனக்கு டான்ஸ் நம்பர் இல்லை என்ற விஷயம்தான் என்னை மிகவும் உற்சாகப்படுத்தியது” என்று ஆச்சரியமான பதிலை கொடுத்துள்ளார்.
அவரைத் தொடர்ந்து பேசிய நடிகை சாய் பல்லவியும், “இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி என்னிடம் முதலில் சொன்னதே, இந்தப் படத்தில் டான்ஸ் பாடல் கிடையாது என்பதுதான். இதே விஷயத்தைத்தான் அவர் ‘அமரன்’ படத்திற்கும் என்னிடம் முதலில் கூறினார்,” என்று கலகலப்பாகப் பகிர்ந்து கொண்டார்.
