
கோடை காலத்தையொட்டி, தமிழகத்தில் வெயில் கடுமையாக வாட்டி வதைத்து வரும் நிலையில், பள்ளிகள் திறப்பதைத் தள்ளி வைக்க மாணவர்களின் பெற்றோர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் என பல்வேறு தரப்பினரும் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஜப்பான் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்!
இது தொடர்பாக, தமிழக முதலமைச்சரிடம் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசித்த நிலையில் பள்ளிகள் திறப்பு குறித்த அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார். அதில், “தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவிபெறும், தனியார் பள்ளிகள் அனைத்தும் ஜூன் 7- ஆம் தேதி திறக்கப்படும். ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை ஜூன் 7- ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், மாணவர்களின் நலன் கருதி பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“ஐ.டி. சோதனை- முன்கூட்டியே தகவல் இல்லை”- எஸ்.பி. சுந்தரவதனன் விளக்கம்!
ஜூன் 1- ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என முதலில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பள்ளி திறப்பு தற்போது தள்ளி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.