Homeசெய்திகள்சினிமாஇந்திய சினிமாவுக்கு கிடைத்த பொக்கிஷம்.... தனுஷ் குறித்து ஸ்ரீலீலா!

இந்திய சினிமாவுக்கு கிடைத்த பொக்கிஷம்…. தனுஷ் குறித்து ஸ்ரீலீலா!

-

- Advertisement -

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான தனுஷ் நடிப்பில், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் ‘ஓ.எம்’ (O.M). இந்திய சினிமாவுக்கு கிடைத்த பொக்கிஷம்.... தனுஷ் குறித்து ஸ்ரீலீலா!தனுஷுடன் இணைந்து மம்மூட்டி, சாய் பல்லவி மற்றும் ஸ்ரீலீலா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படம், வருகிற நவம்பர் 20-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. அதேசமயம் படத்தில் நடித்துள்ள முன்னணி நடிகர்களுக்கு வலுவான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருக்கும் போல் தெரிகிறது. படப்பிடிப்புகள் ஏற்கனவே நிறைவடைந்து ட்ரைலரும் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது. எனவே திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வரும் இந்தப் படத்தின் பிரீ ரிலீஸ் விழா சில தினங்களுக்கு முன்னர் சென்னையில் நடைபெற்றது. அந்த விழாவில் பேசிய நடிகை ஸ்ரீலீலா, தனுஷ் குறித்துப் பகிர்ந்துகொண்ட நெகிழ்ச்சியான விஷயங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. அதன்படி ஸ்ரீலீலா, “நான் சினிமாவில் அறிமுகமாவதற்கு முன்பே, ஒரு இயக்குநராகவும், நடிகராகவும், மிகப்பெரிய நட்சத்திரமாகவும் எனக்கு வந்த முதல் பெரிய அழைப்பு தனுஷ் சாரிடமிருந்துதான் வந்தது. அந்த நாள் எனக்கு எப்போதும் மறக்க முடியாது” என்றார்.

தொடர்ந்து பேசிய ஸ்ரீலீலா, “ஒரு கலைஞராக நீங்கள் இந்திய சினிமாவுக்குக் கிடைத்த ஒரு பொக்கிஷம். ஒரு மனிதராக, நீங்கள் படப்பிடிப்புத் தளத்திற்குள் நுழைந்தாலே அங்கே ஒரு ‘விபூதி’ வாசனை வீசும். உங்களிடம் அப்படி ஒரு தெய்வீகமான ஆற்றல் இருக்கிறது,” என்று நெகிழ்ச்சியுடன் கூறினார். தனுஷ் குறித்து ஸ்ரீலீலா பேசிய இந்த வார்த்தைகள் அரங்கத்தில் இருந்த ரசிகர்களிடையே பெரும் வரவேற்பையும், கைதட்டல்களையும் பெற்றன.

​

MUST READ