அஜித்தின் டேட் டெவில் பட புதிய அப்டேட் வெளிவந்துள்ளது.
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான அஜித் குமார் மற்றும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் வெளியான ‘குட் பேட் அக்லி’ திரைப்படம், அஜித்தின் திரைப் பயணத்திலேயே அதிக வசூல் செய்த படமாக அமைந்து மாபெரும் சாதனை படைத்தது. அந்த பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, அஜித் – ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணி தற்போது மீண்டும் ஒரு புதிய திரைப்படத்திற்காக இணைந்துள்ளது. இப்படத்திற்கு ‘டேர் டெவில்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.
ஷாலினி அஜித்குமார் இப்படத்தைத் தயாரிக்க, ராக்ஸ்டார் அனிருத் இதற்கு இசையமைக்கிறார். சில நாட்களுக்கு முன்பு இப்படத்தின் பூஜை மிகச் சிறப்பாக நடைபெற்று முடிந்த நிலையில், தற்போது முதற்கட்டப் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜி ஃபிலிம் சிட்டியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இப்படத்தில் பிரபு, பார்த்திபன், ஸ்ரீலீலா, உன்னி முகுந்தன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பதாகத் தகவல்கள் வெளியான நிலையில், தற்போது அஜித், பிரபு, பார்த்திபன் மற்றும் ஸ்ரீலீலா ஆகியோர் பங்கேற்கும் முக்கியமான ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில், ‘டேர் டெவில்’ திரைப்படம் குறித்த மற்றுமொரு மிரட்டலான அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி, கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் இப்படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடிக்கப் போகிறார் என புதிய தகவல் கசிந்துள்ளது. அதாவது சுமார் நான்கு மாதங்களுக்கு முன்பே இப்படத்திற்காக சிவராஜ்குமார் ஒப்பந்தம் செய்யப்பட்டுவிட்டதாகப் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், வருகிற நவம்பர் 17 அல்லது 18 ஆம் தேதி முதல் ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் படப்பிடிப்பில் சிவராஜ்குமார் இணையவுள்ளதாகவும், இந்தப் படப்பிடிப்புத் திட்டம் வருகிற டிசம்பர் 20-ஆம் தேதி வரை தொடர்ந்து நடைபெறவுள்ளதாகவும் கூறப்படுகிறது. அஜித் குமாருக்கு இணையான ஒரு பலம் வாய்ந்த வில்லனாக சிவராஜ்குமார் களமிறங்குவது ரசிகர்களிடையே இப்போதே உச்சகட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
