Homeசெய்திகள்சினிமாவிஷ்ணு விஷால், மமிதா பைஜூவின் 'இரண்டு வானம்' .... இணையத்தில் லீக்கான கதைக்களம்!

விஷ்ணு விஷால், மமிதா பைஜூவின் ‘இரண்டு வானம்’ …. இணையத்தில் லீக்கான கதைக்களம்!

-

- Advertisement -

விஷ்ணு விஷால், மமிதா பைஜூ நடிக்கும் இரண்டு வானம் படத்தின் கதைக்களம் வெளியாகி உள்ளது.விஷ்ணு விஷால், மமிதா பைஜூவின் 'இரண்டு வானம்' .... இணையத்தில் லீக்கான கதைக்களம்!

தமிழ் சினிமாவில் ‘ராட்சசன்’ என்ற மிரட்டலான த்ரில்லர் படத்தை கொடுத்து ரசிகர்களைக் கவர்ந்த இயக்குநர் ராம்குமார் தற்போது மீண்டும் விஷ்ணு விஷால் உடன் கூட்டணி அமைத்துள்ளார். அதன்படி இவர்களது கூட்டணியில் முற்றிலும் மாறுபட்ட விசித்திரமான ஃபேண்டஸி காதல் கதையாக உருவாகியுள்ள திரைப்படம் தான் ‘இரண்டு வானம்’. இப்படத்தில் கதாநாயகனாக விஷ்ணு விஷாலும், கதாநாயகியாக மமிதா பைஜுவும் முதன்முறையாக இணைந்து நடித்துள்ளனர். ஏற்கனவே இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி படப்பிடிப்புகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. அதே சமயம் கடந்த அக்டோபர் மாதத்தில் இந்த படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஒரு சில தவிர்க்க முடியாத காரணங்களால் இப்படம் தள்ளிப்போனது.விஷ்ணு விஷால், மமிதா பைஜூவின் 'இரண்டு வானம்' .... இணையத்தில் லீக்கான கதைக்களம்! இந்நிலையில், இப்படத்தின் கதைக்களம் குறித்த சுவாரசியமான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. கொடைக்கானலில் உள்ள ஒரு என்.ஜி.ஓ-வில் பணிபுரிவதுடன் வெளிநாட்டு வேலைக்கு முயற்சிக்கும் ஜீவா என்ற இளைஞனுக்கும், கயல் என்ற ரேடியோ தொகுப்பாளருக்கும் இடையே ஒரு பழைய ரேடியோ போன் மூலம் எதிர்பாராத விதமாகத் தொடர்பு ஏற்படுகிறது. இந்தக் காதலின் பின்னணியில் மிகப்பெரிய ஆச்சரியம் காத்திருக்கிறது. அதாவது ஜீவா வாழ்வது 2017-ஆம் ஆண்டு என்பதும், கயல் வாழ்வது 2022-ஆம் ஆண்டு என்பதும் அவர்களுக்குத் தெரியவருகிறது.விஷ்ணு விஷால், மமிதா பைஜூவின் 'இரண்டு வானம்' .... இணையத்தில் லீக்கான கதைக்களம்!ஐந்து ஆண்டுகள் கால இடைவெளியில் இருக்கும் இவர்கள், கிராமத்து குழந்தைகளுக்குக் கல்வி கற்பிக்க உதவுவதுடன், ஒருவருக்கொருவர் தங்கள் கனவுகளை அடைய ஊக்கமளிக்கின்றனர். நாளுக்கு நாள் இவர்களின் நட்பு ஆழமாகி காதலாக மலர்கிறது. ஆனால், கயலின் வாழ்க்கையில் நடந்த ஒரு துயரமான கடந்த காலம் அவளைப் பின்னோக்கி இழுத்து பயமுறுத்துகிறது. கயலின் சோகமான கடந்த கால விதியை மாற்றி, அவளுடைய எதிர்காலத்தைக் காப்பாற்றி, காலம் கடந்த இந்தக் காதலில் இவர்கள் எப்படி ஒன்றுசேர்கிறார்கள் என்பதே ‘இரண்டு வானம்’ படத்தின் உணர்வுபூர்வமான ஃபேண்டஸி கதைக்களமாகும். ‘ராட்சசன்’ கூட்டணி மீண்டும் இணைவதுடன், டைம் டிராவல் மற்றும் காதல் கலந்த இந்தப் புதிய படைப்பு ரசிகர்களுக்கு ஒரு புதுவிதமான திரையனுபவத்தைத் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் இணையத்தில் கசிந்துள்ள இந்த கதைக்களம் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மிகப்பெரிய அளவில் அதிகப்படுத்தியுள்ளது.

 

MUST READ