Homeசெய்திகள்சினிமாஇரட்டை வேடங்களில் நடித்துள்ள தனுஷ்.... 'ஓம்' படம் குறித்த சுவாரஸ்ய தகவல்!

இரட்டை வேடங்களில் நடித்துள்ள தனுஷ்…. ‘ஓம்’ படம் குறித்த சுவாரஸ்ய தகவல்!

-

- Advertisement -

தனுஷ் நடித்துள்ள ஓம் படம் குறித்த சுவாரஸ்ய தகவல் வெளிவந்துள்ளது.இரட்டை வேடங்களில் நடித்துள்ள தனுஷ்.... 'ஓம்' படம் குறித்த சுவாரஸ்ய தகவல்!

நடிகர் தனுஷின் 55வது படமாக உருவாகி இருக்கும் திரைப்படம் தான் ஓம். இந்த படத்தை ‘அமரன்’ படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமான இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கி இருக்கிறார். சாய் அபியங்கரின் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தை உண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனமும், ஆர்-டேக் ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. இந்த படத்தில் தனுஷ், மம்மூட்டி, சாய் பல்லவி, ஸ்ரீலீலா ஆகியோர் மிகவும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படம் வருகின்ற நவம்பர் 20ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. இரட்டை வேடங்களில் நடித்துள்ள தனுஷ்.... 'ஓம்' படம் குறித்த சுவாரஸ்ய தகவல்!இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வரும் நிலையில், படம் தொடர்பாக வெளிவரும் ஒவ்வொரு அப்டேட்டுகளும் ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் ஏற்கனவே இந்த படத்தில் இருந்து அடுத்தடுத்த பாடல்களும், ட்ரெய்லரும் வெளியாகி இணையத்தில் ட்ரெண்டாகி வருகின்றன. தற்போது இதன் கூடுதல் தகவல் என்னவென்றால், இந்த படத்தில் நடிகர் தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார் என்று சொல்லப்படுகிறது. அதாவது ஏற்கனவே வெளியான தகவலின் படி நடிகர் தனுஷ் இப்படத்தில், பழனிவேல்/குமரன் என்ற கதாபாத்திரத்தில் அண்டர்கவர் ஏஜெட்டாக நடித்துள்ளார் என்று சொல்லப்பட்டது.இரட்டை வேடங்களில் நடித்துள்ள தனுஷ்.... 'ஓம்' படம் குறித்த சுவாரஸ்ய தகவல்! ஆனால் பழனிவேலாக அப்பாவாகவும், குமரனாக மகனாகவும் நடித்துள்ளாராம் தனுஷ். பழனிவேல் என்ற கதாபாத்திரத்திற்கு ஜோடியாக ரோஜா என்ற கதாபாத்திரத்தில் ஸ்ரீலீலா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ‘ஓம்’ படத்தில் நடிகர் தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்திருக்கும் தகவல் ரசிகர்களுக்கு படத்தின் மீதான எதிர்பார்ப்பை இன்னும் அதிகமாக்கியுள்ளது. எனவே இந்த படத்தை திரையரங்குகளில் கொண்டாட ரசிகர்கள் இப்பொழுதே தயாராகி வருகிறார்கள்.

MUST READ