மதுரை தனிஷ்க் நகைக்கடை கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட நிஷாந்த், விசாரணைக்காக மதுரைக்கு அழைத்து வரப்பட்டபோது அணிந்திருந்த டி-ஷர்ட்டில் இடம்பெற்றிருந்த வாசகம் கவனம் பெற்றுள்ளது.
தருமபுரி மாவட்டம் சேஷம்பட்டியில் அதியமான் கோட்டை போலீசாரால் நேற்று கைது செய்யப்பட்ட நிஷாந்த், பின்னர் மதுரைக்கு அழைத்து வரப்பட்டார். நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை மதுரை எஸ்.எஸ். காலனி காவல் நிலையத்தில் அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.
இதையடுத்து, இன்று அதிகாலை மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு உடல் பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்ட அவர், பின்னர் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார்.
டி-ஷர்ட்டில் இடம்பெற்ற ஆங்கில வாசகம்
தருமபுரியிலிருந்து மதுரைக்கு அழைத்து வரப்பட்டபோது வெள்ளை நிற உடை அணிந்திருந்த நிஷாந்த், இன்று சிவப்பு நிற டி-ஷர்ட் அணிந்திருந்தார். அந்த டி-ஷர்ட்டின் பின்புறத்தில் “DEMONS INSIDE MY HEAD” என்ற ஆங்கில வாசகம் இடம்பெற்றிருந்தது.
இதன் தமிழ்ப் பொருள், “எனது தலைக்குள் பேய்கள் இருக்கின்றன” என்பதாகும். கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட நிஷாந்த் அணிந்திருந்த டி-ஷர்ட்டில் காணப்பட்ட இந்த வாசகம் அங்கு கவனத்தை ஈர்த்தது.
