Homeசெய்திகள்சென்னைசென்னை டிஎம்எஸ் வளாகத்தில் 108 அவசர ஊர்தி சேவை மையத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் நேரில்...

சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் 108 அவசர ஊர்தி சேவை மையத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் நேரில் ஆய்வு!

-

- Advertisement -

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில் செயல்பட்டு வரும் 108 அவசர ஊர்தி சேவை மையத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் 108 அவசர ஊர்தி சேவை மையத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் நேரில் ஆய்வு!

தமிழகம் முழுவதும் 1,353 அவசர ஊர்தி வாகனங்கள் செயல்பட்டு வரும் நிலையில், அவசர அழைப்புகள் ஏற்கப்படும் மையத்திற்குச் சென்ற முதலமைச்சர், அங்கு நடைபெறும் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்து வருகிறார். அவசர அழைப்புகளைப் பதிவு செய்யும் பணியில் 277 பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், 108 அவசர ஊர்தி சேவையின் செயல்பாடுகள் தொடர்பான விளக்கக் காட்சிகள் முதலமைச்சருக்கு எடுத்துரைக்கப்பட உள்ளன. மனநல ஆலோசனைகள் வழங்குவதற்கான அழைப்புகளைக் கையாளும் சிறப்புப் பிரிவும் இந்த மையத்தில் செயல்பட்டு வருகிறது.

இதனைத் தொடர்ந்து, வெண்டிலேட்டர் வசதியுடன் கூடிய அவசர ஊர்தி வாகனம் மற்றும் ‘மொபைல் ஆம்புலன்ஸ்’ எனப்படும் இருசக்கர அவசர ஊர்தி வாகனம் ஆகியவற்றையும் முதலமைச்சர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார்.

சென்னை பெருநகரப் பகுதியை 5,904 சதுர கி.மீ. ஆக விரிவுபடுத்தத் திட்டம் – ஒருங்கிணைந்த வளர்ச்சித் திட்டம் தயாரிக்க ரூ.45.50 கோடி ஒதுக்கீடு!

MUST READ