Homeசெய்திகள்க்ரைம்பெண் காவலருக்கு பாலியல் தொந்தரவு புகார் – இன்ஸ்பெக்டர் திலீபன் காவல்துறை பணியிலிருந்து விடுவிப்பு!

பெண் காவலருக்கு பாலியல் தொந்தரவு புகார் – இன்ஸ்பெக்டர் திலீபன் காவல்துறை பணியிலிருந்து விடுவிப்பு!

-

- Advertisement -

பெண் காவலருக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாகப் புகார் எழுந்த நிலையில், காவல் ஆய்வாளர் திலீபன் காவல்துறை பணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.பெண் காவலருக்கு பாலியல் தொந்தரவு புகார் – இன்ஸ்பெக்டர் திலீபன் காவல்துறை பணியிலிருந்து விடுவிப்பு!

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த திலீபன், கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளராகப் பணியாற்றி வந்தார். அப்போது, அங்கு பணியாற்றிய பெண் காவலர் ஒருவருக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக அவர் மீது புகார் எழுந்தது. இதன் அடிப்படையில், நெல்லை சரக டிஐஜி திலீபனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

இதற்கிடையே, திலீபன் உதவி காவல் ஆய்வாளராகப் பணியில் சேர்ந்த காலகட்டத்தில், சுமார் 585 நாட்கள் உயர் அதிகாரிகளுக்கு முறையான தகவல் தெரிவிக்காமல், எந்தவித முன்னறிவிப்பும் இன்றி தன்னிச்சையாக விடுமுறை எடுத்திருந்ததாகக் கூறப்படுகிறது.

மேலும், இது தொடர்பாக உயர் அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணைக்கு அவர் முழுமையான ஒத்துழைப்பு வழங்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, திலீபனை காவல்துறைப் பணியிலிருந்து விடுவித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

செல்போனில் கலர் டாட் தெரிகிறதா? உஷார் மக்களே! – குழந்தைகள் கண்காணிப்பு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பெண்ணை ரகசியமாக வீடியோ எடுத்த நபர் கைது; சென்னையில் அதிர்ச்சி சம்பவம்!

MUST READ