சோனியா காந்தியின் சுயசரிதை நூல் வெளியீட்டு விழா அழைப்பு – ராகுல் காந்தியின் தொலைபேசி அழைப்பைத் தவிர்த்த மு.க.ஸ்டாலின்; நூலுக்கு வாழ்த்து!
காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியின் சுயசரிதை நூல் வெளியீட்டு விழாவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை அழைக்க ராகுல் காந்தி முயன்றதாகவும், அந்தத் தொலைபேசி அழைப்பை ஸ்டாலின் ஏற்காமல் தவிர்த்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சோனியா காந்தி எழுதியுள்ள ‘Belonging: A Journey of Love’ என்ற சுயசரிதை நூல் வெளியீட்டு விழா நவம்பர் 16-ஆம் தேதி டெல்லியில் நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்க மு.க.ஸ்டாலினை அழைப்பதற்காக ராகுல் காந்தியின் அலுவலகம் தொலைபேசி மூலம் தொடர்புகொள்ள முயன்றதாகக் கூறப்படுகிறது.
அப்போது, ஏற்கனவே திட்டமிடப்பட்ட பணிகள் இருப்பதாகத் தெரிவித்து, ராகுல் காந்தியுடன் பேசுவதை ஸ்டாலின் தவிர்த்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சோனியா காந்திக்கு வாழ்த்து
ராகுல் காந்தியின் அழைப்பை ஏற்காத நிலையில், சோனியா காந்தியின் சுயசரிதை நூல் வெளியானதற்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்துச் செய்தி அனுப்பியதாகக் கூறப்படுகிறது.
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் இருந்து விலகி, தமிழக வெற்றிக் கழகத்துக்கு ஆதரவு அளித்து ஆட்சியில் பங்கேற்றது.
இதனால் திமுக மற்றும் காங்கிரஸ் இடையிலான அரசியல் உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில், இந்தத் தொலைபேசி அழைப்பு விவகாரம் அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.
