spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுடாஸ்மாக் ஒப்பந்ததாரர் வீட்டில் ரூ.2 கோடி பறிமுதல்?

டாஸ்மாக் ஒப்பந்ததாரர் வீட்டில் ரூ.2 கோடி பறிமுதல்?

-

- Advertisement -

டாஸ்மாக் ஒப்பந்ததாரர் வீட்டில் ரூ.2 கோடி பறிமுதல்?

வருமான வரித்துறையின் 2-ம் நாள் சோதனையில் கணக்கில் வராத ரூ.2 கோடி பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

BREAKING : டாஸ்மார்க் ஒப்பந்ததாரிடம் ரூ.2 1 கோடி ரொக்கம் பறிமுதல்...! - Dinasuvadu

தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு, ஆயத்தீர்வுத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் இரண்டாவது நாளாக வருமான வரித்துறை சோதனை தொடர்கிறது. டாஸ்மாக் மற்றும் அரசு ஒப்பந்ததாரர்களின் அலுவலகம் மற்றும் இல்லங்களில் வருமான வரித்துறை சோதனை தொடர்கிறது.

we-r-hiring

டாஸ்மாக் நிறுவனத்திற்கு லாரி ஒப்பந்ததாரராக செயல்பட்டு வருகிறார் ஈரோட்டைச் சேர்ந்த சச்சிதானந்தம். சச்சிதானந்தத்துக்கு சொந்தமான வீடு, அலுவலகங்கள் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் டாஸ்மாக் நிறுவன லாரி ஒப்பந்ததாரர் சச்சிதானந்தம் தொடர்பான இடங்களில் ரூ.2 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. போக்குவரத்து ஒப்பந்த வசூல் தொகையை அமைச்சரிடம் கொடுக்க வைத்திருந்ததாக ஒப்பந்ததாரர் வாக்குமூலம் அளித்ததாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

 

MUST READ