Homeசெய்திகள்சினிமாஹரி இயக்கத்தில் அதர்வா நடிக்கும் புதிய படம்.... கதாநாயகி யார்?

ஹரி இயக்கத்தில் அதர்வா நடிக்கும் புதிய படம்…. கதாநாயகி யார்?

-

- Advertisement -

ஹரி இயக்கத்தில் அதர்வா நடிக்கும் புதிய படத்தின் கதாநாயகி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.ஹரி இயக்கத்தில் அதர்வா நடிக்கும் புதிய படம்.... கதாநாயகி யார்?

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான ஹரி, விறுவிறுப்பான கமர்ஷியல் திரைப்படங்களை வழங்குவதில் வல்லவர். இவரது இயக்கத்தில் வெளியான ‘சிங்கம்’, ‘தாமிரபரணி’, ‘பூஜை’ போன்ற பல திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றிப் படங்களாக அமைந்தன. கடைசியாக விஷால் நடிப்பில் இவர் இயக்கிய ‘ரத்னம்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
இதற்கு அடுத்ததாக ஹரி எந்தப் படத்தை இயக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்த நிலையில், நடிகர் அதர்வா நடிப்பில் அவர் ஒரு புதிய படத்தை இயக்கவுள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. தற்போது அதர்வா ஒரு புதிய வெப் சீரிஸில் கவனம் செலுத்தி வருவதால், அதன் பணிகளை முடித்துவிட்டு ஹரி இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் இணைவார் என்று ஏற்கனவே தகவல் கசிந்திருந்தது.ஹரி இயக்கத்தில் அதர்வா நடிக்கும் புதிய படம்.... கதாநாயகி யார்?இந்நிலையில், இப்படத்தின் கதாநாயகி தேர்வு குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தில் நடிக்க நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் கயடு லோஹர் ஆகிய இருவரிடமும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது. ஆனால், இவர்கள் இருவருமே இப்படத்தில் நடிக்கப் போகிறார்களா? அல்லது யாரேனும் ஒருவர் மட்டுமே கதாநாயகியாக நடிக்கப் போகிறார்களா? என்பது குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட் இதுவரை வெளியாகவில்லை. இனிவரும் நாட்களில் இது குறித்த மற்ற அப்டேட்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ