Homeசெய்திகள்சினிமாசிம்பு - கீர்த்தீஸ்வரன் கூட்டணியில் ஏற்பட்ட திடீர் மாற்றம்.... கைகோர்க்கும் முன்னணி நிறுவனங்கள்!

சிம்பு – கீர்த்தீஸ்வரன் கூட்டணியில் ஏற்பட்ட திடீர் மாற்றம்…. கைகோர்க்கும் முன்னணி நிறுவனங்கள்!

-

- Advertisement -

சிம்பு – கீர்த்தீஸ்வரன் கூட்டணியில் உருவாகும் புதிய படம் குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது.சிம்பு - கீர்த்தீஸ்வரன் கூட்டணியில் ஏற்பட்ட திடீர் மாற்றம்.... கைகோர்க்கும் முன்னணி நிறுவனங்கள்!

நடிகர் சிம்பு தற்போது இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘அரசன்’ படத்தில் நடிக்கிறார். இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. வெற்றிமாறன் இப்படத்தில் சிம்புவை வேறொரு பரிமாணத்தில் காட்டியிருப்பார் என்ற எதிர்பார்ப்பு இருப்பதால், ரசிகர்கள் எப்படியாவது இப்படத்தை திரையரங்குகளில் கொண்டாடித் தீர்த்திட வேண்டும் என்ற ஆவலோடு காத்துக்கொண்டிருக்கின்றனர். இதன் படப்பிடிப்பானது கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை நெருங்கியிருக்கும் நிலையில், இப்படத்தின் பின்னணி வேலைகள் தற்போது நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது. மேலும், 2027-ஆம் ஆண்டின் முதல் பாதியில் இப்படம் ரிலீஸ் செய்யப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.சிம்பு - கீர்த்தீஸ்வரன் கூட்டணியில் ஏற்பட்ட திடீர் மாற்றம்.... கைகோர்க்கும் முன்னணி நிறுவனங்கள்!இதற்கிடையே, ‘டியூட்’ படத்தின் இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் சிலம்பரசன் ஒரு புதிய ப்ராஜெக்ட்டில் கமிட்டானார். அந்தப் படத்தின் ஷூட்டிங் இந்த வருடம் இறுதியில் தொடங்கும் என சொல்லப்பட்டிருந்தது. ஆனால், அந்தப் படத்தைத் தயாரிக்க இருந்த சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இப்படத்திலிருந்து விலகிவிட்டதாக ஏற்கனவே தகவல் கசிந்தது. இந்தத் திடீர் மாற்றத்தை தொடர்ந்து, கீர்த்தீஸ்வரன் கூட்டணியிலான இந்தப் புதிய படத்தைத் தயாரிப்பதற்காகத் தமிழ் சினிமாவின் முன்னணி நிறுவனங்களான ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ ஆகிய நிறுவனங்களிடம் சிலம்பரசன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகச் சொல்லப்படுகிறது. இனிவரும் நாட்களில் இப்படம் குறித்த மற்ற அப்டேட்கள் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.

 

MUST READ