Homeசெய்திகள்சினிமாஅடுத்த பிளாக்பஸ்டருக்கு தயாராகும் சூர்யா.... 'கருப்பு- பாகம் 2' குறித்து வெளியான புதிய அப்டேட் ......

அடுத்த பிளாக்பஸ்டருக்கு தயாராகும் சூர்யா…. ‘கருப்பு- பாகம் 2’ குறித்து வெளியான புதிய அப்டேட் … கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

-

- Advertisement -

கருப்பு படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.அடுத்த பிளாக்பஸ்டருக்கு தயாராகும் சூர்யா.... 'கருப்பு- பாகம் 2' குறித்து வெளியான புதிய அப்டேட் ... கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!2026-ஆம் ஆண்டு மே மாதம் 16-ஆம் தேதி ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில், சூர்யா நடிப்பில் ‘கருப்பு’ திரைப்படம் வெளியானது. த்ரிஷா, ஆர்.ஜே. பாலாஜி உள்ளிட்டோர் நடித்திருந்த இப்படத்தில் சூர்யா ‘காட்’ மற்றும் வக்கீல் என இரு பரிமாணங்களில் தோன்றி ரசிகர்களைக் கவர்ந்தார். குறிப்பாக, இப்படத்தின் கிளைமாக்ஸில் வரும் ‘கருப்பன்’ பாடல் ரசிகர்கள் மத்தியில் பயங்கர ஹிட் அடித்தது. மேலும், படத்தின் கிளைமாக்ஸில் ‘கருப்பு Vs வெள்ளை’ என்று அடுத்த பாகத்திற்கான லீட் கொடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்ற இப்படம், சுமார் ரூ. 100 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் உருவாகி, உலகளவில் ரூ. 350 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்ததாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, தமிழ்நாட்டில் மட்டுமே ரூ.170 கோடிக்கும் மேல் வசூலித்து சூர்யாவின் திரைப்பயணத்தில் அதிக வசூல் செய்த படமாக அமைந்தது.அடுத்த பிளாக்பஸ்டருக்கு தயாராகும் சூர்யா.... 'கருப்பு- பாகம் 2' குறித்து வெளியான புதிய அப்டேட் ... கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!2026-ஆம் ஆண்டில் ‘கருப்பு’ படத்திற்குப் பிறகு வெளியான ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ மற்றும் ‘சீன்’ ஆகிய படங்களும் சூர்யாவிற்கு நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்துள்ளன. தற்போது தனது 48-வது படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. மேலும் சூர்யாவின் 49-வது படத்தை இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கவுள்ளதாகத் பேச்சு அடிபட்டு வருகின்றன. இந்நிலையில், மாபெரும் வெற்றி பெற்ற ‘கருப்பு’ படத்தின் இரண்டாம் பாகமான ‘கருப்பு 2’ குறித்த சுவாரசியமான தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இந்த படமானது சூர்யாவின் 50-வது படமாக அமையவுள்ளதாக கூறப்படுகிறது. ‘கருப்பு’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருக்கும் தகவல் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ