Homeசெய்திகள்மாவட்டம்காவிரி நீரின்றி காய்ந்து கருகும் சம்பா பயிர்கள்: வயல்களில் இறங்கி விவசாயிகள் போராட்டம் – ஏக்கருக்கு...

காவிரி நீரின்றி காய்ந்து கருகும் சம்பா பயிர்கள்: வயல்களில் இறங்கி விவசாயிகள் போராட்டம் – ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்கக் கோரிக்கை!

-

- Advertisement -

தஞ்சாவூர் மாவட்டத்தில் காவிரி நீர் கிடைக்காததால் சம்பா பயிர்கள் காய்ந்து கருகி வருவதாகக் குற்றம்சாட்டி, விவசாயிகள் பாதிக்கப்பட்ட வயல்களில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.காவிரி நீரின்றி காய்ந்து கருகும் சம்பா பயிர்கள்: வயல்களில் இறங்கி விவசாயிகள் போராட்டம் – ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்கக் கோரிக்கை!

அம்மாபேட்டை, புத்தூர், நெடுவாசல் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தண்ணீரின்றி பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

சம்பா பயிர்கள் சூல் பிடிக்கும் பருவத்தில் வயல்களில் சொட்டுத் தண்ணீர் கூட இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் ஈரப்பதமின்றி வயல்கள் பாளம் பாளமாக வெடித்துக் காணப்படுவதுடன், பயிர்களும் காய்ந்து கருகி வருகின்றன. இதனால் கவலையடைந்த விவசாயிகள், பாதிக்கப்பட்ட வயல்களிலேயே இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தவெக தலைமையிலான தமிழக அரசு விவசாயிகளைக் காப்பாற்ற எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை எனப் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் குற்றம்சாட்டினர்.

மேலும், பயிர் பாதிப்புகளை அரசு விரைந்து கணக்கெடுக்க வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வீதம் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

சம்பா சாகுபடி பாதிக்கப்பட்டு விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ள நிலையில், தமிழக அரசு தாமதமின்றி உரிய நடவடிக்கை எடுத்து நிவாரணம் வழங்க வேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.

மன்னார்குடி அருகே தண்ணீரின்றி கருகும் 3,000 ஏக்கர் சம்பா பயிர்கள் – வயலில் ஒப்பாரி வைத்து கும்மியடித்து வேதனையை வெளிப்படுத்திய பெண்கள்!

MUST READ