Homeசெய்திகள்மாவட்டம்வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் பறவைகள் வருகை குறைவு – பருவமழை பொய்த்ததால் ஏமாற்றத்துடன் திரும்பும் சுற்றுலாப்...

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் பறவைகள் வருகை குறைவு – பருவமழை பொய்த்ததால் ஏமாற்றத்துடன் திரும்பும் சுற்றுலாப் பயணிகள்!

-

- Advertisement -

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில், வடகிழக்குப் பருவமழை போதிய அளவு பெய்யாததால் ஏரியில் நீர்வரத்து இல்லாமல் பறவைகளின் வருகை குறைந்துள்ளது.வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் பறவைகள் வருகை குறைவு – பருவமழை பொய்த்ததால் ஏமாற்றத்துடன் திரும்பும் சுற்றுலாப் பயணிகள்!

இதனால், பறவைகளைக் காண ஆவலுடன் வரும் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் பருவமழை தொடங்கியதும் ஏரியில் நீர்மட்டம் உயர்ந்து, நவம்பர் மாதத்தில் பறவைகளின் வருகை அதிகரிக்கும்.

சில ஆண்டுகளில் முன்கூட்டியே மழை பெய்தால் அக்டோபர் மாதத்திலேயே பறவைகள் வரத் தொடங்கிவிடும். இங்கு பர்மா, வங்கதேசம், பாகிஸ்தான், இந்தோனேசியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் இருந்தும், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பறவைகள் இனப்பெருக்கத்திற்காகவும் இரை தேடியும் வந்து செல்கின்றன.

நத்தை கொத்தி நாரை, பாம்புத்தாரா, அரிவாள் மூக்கன், கரண்டிவாயன், சாம்பல் நிறக் கொக்கு உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட வகைகளைச் சேர்ந்த சுமார் 50 ஆயிரம் பறவைகள் ஆண்டுதோறும் வேடந்தாங்கலுக்கு வருவது வழக்கம்.

இவற்றைக் காண்பதற்காக வெளிநாடுகள் மற்றும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆண்டுக்கு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர்.

ஆனால், இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை போதிய அளவு பெய்யாததால் வேடந்தாங்கல் ஏரியில் நீர்வரத்து இல்லை. இதன் காரணமாக பறவைகளின் வருகையும் எதிர்பார்த்த அளவில் இல்லை.

சரணாலயத்திற்கு வரும் குறைந்த எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகளும் ஏரியில் பறவைகளைக் காண முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.

அக்டோபர் அல்லது நவம்பர் மாதங்களில் பருவமழை பெய்து ஏரியில் நீர்வரத்து அதிகரித்தால், ஜெர்மனி, கனடா, சிங்கப்பூர், அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து பறவைகள் வரத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது பறவைகள் இல்லாததால், குடும்பத்தினருடனும் குழந்தைகளுடனும் வேடந்தாங்கலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்து வருகின்றனர்.

பருவமழை பெய்து ஏரியில் நீர் நிரம்பி, வழக்கம்போல் பறவைகள் வருகை தரும் காலத்தை எதிர்பார்த்து சுற்றுலாப் பயணிகள் காத்திருக்கின்றனர்.

அறந்தாங்கி அருகே போதிய மழையின்றி பயிர்கள் கருகியதால் விவசாயி உயிரிழப்பு – நிவாரணம் வழங்க உறவினர்கள் கோரிக்கை!

MUST READ