Homeசெய்திகள்சினிமாஅடுத்த ஆண்டு தொடங்கும் புதிய படம்.... பசில் ஜோசப் கொடுத்த செம அப்டேட்!

அடுத்த ஆண்டு தொடங்கும் புதிய படம்…. பசில் ஜோசப் கொடுத்த செம அப்டேட்!

-

- Advertisement -

மலையாள சினிமாவில் இயக்குநராகவும் நடிகராகவும் வலம் வருபவர் பசில் ஜோசப் . இவர் ‘மின்னல் முரளி’ என்ற சூப்பர் ஹீரோ படத்தை இயக்கி பிரம்மாண்ட வெற்றி கண்டார். அடுத்த ஆண்டு தொடங்கும் புதிய படம்.... பசில் ஜோசப் கொடுத்த செம அப்டேட்!மேலும் அடுத்தடுத்த படங்களை இயக்குவதிலும் கவனம் செலுத்தி வருகிறார். இது தவிர படங்களில் நடிப்பதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். மலையாளத்தில் மட்டுமல்லாமல் தமிழில் சிவகார்த்திகேயன் நடித்த ‘பராசக்தி’ படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்த இவர், தொடர்ந்து ‘ராவடி’ படத்திலும் நடித்திருந்தார். இது ஒரு பக்கம் இருக்க, மற்றொரு பக்கம் இவர் சூர்யாவை இயக்கப் போவதாக முன்னதாக பேச்சுகள் அடிபட்டாலும், அதுகுறித்து அடுத்தடுத்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. இதனை அடுத்து, பசில் ஜோசப், அல்லு அர்ஜுனுடன் கூட்டணி அமைக்கப் போவதாகவும் சொல்லப்பட்டது. இந்நிலையில் இது குறித்த கூடுதல் தகவல் வெளியாகி உள்ளது. அதாவது பசில் ஜோசப், தற்போது ஒரு புதிய படத்தில் வேலை செய்து வருவதாகவும், அந்தப் படம் அடுத்த ஆண்டு படப்பிடிப்புக்கு தொடங்கும் என்பதை சமீபத்திய வீடியோ ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இந்தப் படம் இந்தியில் உருவாகவில்லை எனக் குறிப்பிட்ட அவர், மற்ற விவரங்களை ரகசியமாக வைத்துள்ளார். எனவே இது பசில் ஜோசப் – அல்லு அர்ஜுன் படம் தொடர்பான அப்டேட்டாக இருக்கலாம் என ரசிகர்கள் இந்த வீடியோவை அதிகம் பகிர்ந்து வருகின்றனர். இனிவரும் நாட்களில் மற்ற அப்டேட்டுகள் வெளிவரும் என நம்பப்படுகிறது.

MUST READ