Homeசெய்திகள்தமிழ்நாடு200 நாட்களில் ரூ.1.73 லட்சம் கோடி முதலீடு; சுமார் 2 லட்சம் வேலைவாய்ப்புகள் – தமிழக...

200 நாட்களில் ரூ.1.73 லட்சம் கோடி முதலீடு; சுமார் 2 லட்சம் வேலைவாய்ப்புகள் – தமிழக அரசு தகவல்!

-

- Advertisement -

தமிழகத்தில் கடந்த 200 நாட்களில் 190 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் ரூ.1.73 லட்சம் கோடி முதலீட்டுக்கான உறுதிமொழிகள் பெறப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் சுமார் 2 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.200 நாட்களில் ரூ.1.73 லட்சம் கோடி முதலீடு; சுமார் 2 லட்சம் வேலைவாய்ப்புகள் – தமிழக அரசு தகவல்!

செங்கல்பட்டு மாவட்டம் கோவளம் பகுதியில் இன்று நடைபெற்ற இரண்டாவது ‘வெற்றி தமிழ்நாடு முதலீடு மற்றும் திட்டச் செயலாக்க மாநாட்டில்’ 78 புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதன் மூலம் ரூ.58,214 கோடி முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளதுடன், 65,786 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வாய்ப்பும் உருவாகியுள்ளது.

மேலும், ரூ.7,925 கோடி முதலீட்டில் செயல்படுத்தப்பட உள்ள 15 திட்டங்களுக்கு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார். இதன் மூலம் 19,965 வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல், ரூ.1,430 கோடி மதிப்பிலான 6 நிறைவடைந்த திட்டங்களையும் தொடங்கி வைத்தார். இத்திட்டங்கள் மூலம் 1,710 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த 200 நாட்களில் தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட முதலீட்டு நடவடிக்கைகள் குறித்து தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், 190 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் ரூ.1.73 லட்சம் கோடி முதலீடும், சுமார் 2 லட்சம் வேலைவாய்ப்புகளும் உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தில் தொழில் வளர்ச்சியை அதிகரித்து, புதிய முதலீடுகளை ஈர்ப்பதுடன், அவற்றை நடைமுறைத் திட்டங்களாக மாற்றி வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில் அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கையாலாகாத தவெக அரசு.. தமிழக நீர்ப்பாசனத் திட்டங்களை முடக்கத் துடிக்கும் கர்நாடக அரசு” – டிடிவி தினகரன் காட்டம்!

MUST READ