Homeசெய்திகள்இந்தியாஇந்தியாவின் முதல் ஏ.ஐ. காவல் நிலையம் – தெலங்கானாவில் தொடக்கம்!

இந்தியாவின் முதல் ஏ.ஐ. காவல் நிலையம் – தெலங்கானாவில் தொடக்கம்!

-

- Advertisement -

இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பம் சார்ந்த காவல் நிலையம் தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள பஞ்சகுட்டாவில் அமைக்கப்பட்டு வருகிறது.

இதற்கான தொழில்நுட்பப் பணிகளை தெலங்கானா மாநில காவல்துறை தலைமை இயக்குநர் (டிஜிபி) சி.வி. ஆனந்த் மற்றும் ஹைதராபாத் மாநகர காவல் ஆணையர் மகேஷ் முரளிதர் பகவத் ஆகியோர் நேற்று நேரில் ஆய்வு செய்தனர்.

இந்த முன்னோடித் திட்டத்தின் கீழ், காவல் நிலையத்தின் பல்வேறு பணிகளிலும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட உள்ளது.

பொதுமக்களிடமிருந்து புகார்களைப் பெறுவது, புகார்களைப் பதிவு செய்வது, வழக்குகளின் விசாரணை தொடர்பான ஆவணங்களைத் தயாரிப்பது முதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வது வரையிலான பணிகளில் ஏ.ஐ. தொழில்நுட்பம் ஒருங்கிணைக்கப்பட உள்ளது.

ஆய்வின்போது காவல் நிலையத்திற்கு வந்திருந்த புகார்தாரர்களைச் சந்தித்த உயர் அதிகாரிகள், அவர்களுடைய குறைகள் எவ்வாறு பெறப்பட்டு தீர்வு காணப்படுகின்றன என்பது குறித்து கேட்டறிந்தனர். மேலும், காவலர்கள் அன்றாடப் பணிகளில் ஏ.ஐ. தொழில்நுட்பத்தை எவ்வாறு பயன்படுத்துகின்றனர் என்பதையும் ஆய்வு செய்தனர்.

பஞ்சகுட்டா காவல் நிலையத்தில் அமைக்கப்பட்டு வரும் நவீனத் தொழில்நுட்பக் கட்டமைப்புகளையும் அதிகாரிகள் பார்வையிட்டனர்.

இந்தத் திட்டம் முதற்கட்டமாக முன்னோடித் திட்டமாகச் செயல்படுத்தப்பட உள்ளது. இதனை விரைவில் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த முயற்சி வெற்றிகரமாகச் செயல்பட்டால், காவல்துறையின் சேவைகளை மேலும் விரைவாகவும் திறம்படவும் வழங்குவதற்கான புதிய வாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

“நாங்கள் ஒன்றும் பிச்சைக்காரர்கள் அல்ல!” – கூட்டணியில் சமாஜ்வாதிக்கு அக்கறை இல்லை: காங்கிரஸ் எம்.பி. இம்ரான் மசூத் காட்டம்!

MUST READ