Homeசெய்திகள்சினிமாஎதிர்பார்ப்பை அதிகப்படுத்தும் நாக சைதன்யாவின் 'விருஷகர்மா' டிரைலர்!

எதிர்பார்ப்பை அதிகப்படுத்தும் நாக சைதன்யாவின் ‘விருஷகர்மா’ டிரைலர்!

-

- Advertisement -

நாக சைதன்யாவின் விருஷகர்மா பட ட்ரைலர் வெளியாகி உள்ளது. எதிர்பார்ப்பை அதிகப்படுத்தும் நாக சைதன்யாவின் 'விருஷகர்மா' டிரைலர்!

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் நாக சைதன்யா, கடைசியாக ‘தண்டேல்’ படத்தில் நடித்திருந்தார். உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று, நாக சைதன்யாவின் திரைப்பயணத்தில் அதிக வசூலை வாரிக்குவித்தது. இது தவிர நாக சைதன்யா, அல்லு அரவிந்த் தயாரிப்பில் உருவாகும் புதிய படம் ஒன்றிலும் கமிட் ஆகியிருக்கிறார். இதற்கிடையில், கார்த்திக் தண்டு இயக்கத்தில் ‘விருஷகர்மா’ எனும் திரைப்படத்தில் நாக சைதன்யா நடித்துள்ளார். நாக சைதன்யாவின் 24 ஆவது படமான இந்தப் படத்தில் நாக சைதன்யாவுடன் இணைந்து மீனாட்சி சௌத்ரி, ஜெயராம் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ராகுல் தருமன் ஒளிப்பதிவு செய்ய, அஜனிஸ் பி லோக்நாத் இசையமைத்துள்ளார்.
ஏற்கனவே இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்த நிலையில், வருகின்ற டிசம்பர் 4ஆம் தேதி திரைக்கு வர தயாராகி வருகிறது.

புராண சாகச த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இப்படத்தின் மீது ஆரம்பத்திலிருந்தே அதிக எதிர்பார்ப்பு இருந்து வந்த நிலையில், தற்போது இதன் டிரைலரும் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. டிரைலரைப் பார்க்கும்போது இந்தப் படமும் நாக சைதன்யாவிற்கு மிகப்பெரிய வெற்றிப் படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இப்படத்தைத் திரையரங்குகளில் காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

 

MUST READ