HomeBreaking Newsதிருப்பரங்குன்றம் மலை உச்சிக்குச் செல்ல 50 பேருக்கு மட்டுமே அனுமதி!

திருப்பரங்குன்றம் மலை உச்சிக்குச் செல்ல 50 பேருக்கு மட்டுமே அனுமதி!

-

- Advertisement -

திருப்பரங்குன்றம் மலை உச்சிக்குச் செல்ல 50 பேருக்கு மட்டுமே அனுமதி – ஓய்வுபெற்ற நீதிபதி வைத்தியநாதன் தகவல்!திருப்பரங்குன்றம் மலை உச்சிக்குச் செல்ல 50 பேருக்கு மட்டுமே அனுமதி!

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், மலை உச்சிக்குச் செல்ல இன்று 50 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என ஓய்வுபெற்ற நீதிபதி வைத்தியநாதன் தெரிவித்துள்ளார்.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக உச்சநீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவைச் செயல்படுத்துவதற்காக ஓய்வுபெற்ற நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், வி.பார்த்திபன் ஆகியோர் அடங்கிய குழுவை உச்சநீதிமன்றம் நியமித்தது.

இதனைத் தொடர்ந்து, இன்று திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வந்த ஓய்வுபெற்ற நீதிபதிகள் குழுவினர், கோவில் நிர்வாகத்தினர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். தொடர்ந்து, தீபம் ஏற்றுவதற்குத் தேவையான நெய், மண்சட்டி, திரி, துணி உள்ளிட்ட பொருட்கள் தயார் செய்யப்பட்டு மலைக்குக் கொண்டு செல்லும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

மதுரை மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா, ஓய்வுபெற்ற நீதிபதிகள் குழுவினருடன் இணைந்து, பழனி ஆண்டவர் கோவில் மலைப்பாதை தொடங்கும் இடம் வரை தீபம் ஏற்றுவதற்கான பொருட்களைக் கொண்டு சென்று கோவில் ஊழியர்களிடம் ஒப்படைத்தார். பின்னர், கோவில் ஊழியர்கள் அந்தப் பொருட்களை மலை உச்சிக்குக் கொண்டு சென்றனர்.

இதற்கிடையே, தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதால், திருப்பரங்குன்றம் மலைக்கு இதுவரை பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில், இன்று மலை உச்சிக்குச் செல்ல 50 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்று ஓய்வுபெற்ற நீதிபதி வைத்தியநாதன் தெரிவித்துள்ளார். இதனால், தீபம் ஏற்றும் நிகழ்வையொட்டி மலைப்பகுதியில் பாதுகாப்பு மற்றும் ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன.

MUST READ