Homeசெய்திகள்அரசியல்தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்தால் பாஜகவுடன் கூட்டணியா? – கனிமொழி எம்.பி. கேள்வி!

தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்தால் பாஜகவுடன் கூட்டணியா? – கனிமொழி எம்.பி. கேள்வி!

-

- Advertisement -

தொகுதி மறுவரையறை மசோதாவுக்குத் தமிழ்நாட்டின் நலனைக் கருத்தில் கொண்டே திமுக ஆதரவு தெரிவித்துள்ளதாகவும், ஒரு மசோதாவை ஆதரிப்பதால் மட்டுமே பாஜகவுடன் கூட்டணி என்று அர்த்தமாகிவிடாது என்றும் திமுக நாடாளுமன்றக் குழுத் துணைத் தலைவரும், மக்களவை உறுப்பினருமான கனிமொழி தெரிவித்துள்ளார்.

தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக அதிகாரப்பூர்வமாக ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அவரது இல்லத்தில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி, டி.ஆர்.பாலு, ஆ.ராசா, தயாநிதி மாறன் ஆகியோர் நேரில் சந்தித்துப் பேசினர்.

இந்தச் சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் கனிமொழி கூறியதாவது:

தமிழக நலனே திமுகவின் நிலைப்பாடு:

திமுக தலைவர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த முடிவை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேரில் சந்தித்துத் தெரிவித்துள்ளோம்.

மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் தமிழ்நாடு எந்த வகையிலும் பாதிக்கப்படக் கூடாது என்பதே திமுகவின் உறுதியான நிலைப்பாடு. நியாயமான தொகுதி மறுவரையறை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதற்காகப் பல்வேறு மாநில முதலமைச்சர்களை அழைத்து ஆலோசனை நடத்தியதும் திமுகதான்.

தற்போது 1971-ம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்துவதாக பாஜக தெரிவித்துள்ளது. இது தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் உரிமைகளை உறுதி செய்யும் வகையில் அமைவதால் மகிழ்ச்சியளிக்கிறது. திமுக தனது நிலைப்பாட்டில் தொடர்ந்து உறுதியாக உள்ளது.

ராகுல் காந்தியின் விமர்சனத்துக்குப் பதில்*:

பாஜகவின் தொகுதி மறுவரையறை முயற்சிக்கு ஆதரவு தெரிவிக்கும் கட்சிகளைக் குறிப்பிட்டு, சில கட்சிகள் கோழையாக மாறிவிட்டதாக ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். அவர் யாரைக் குறிப்பிடுகிறார் என்பது தெரியவில்லை.

ஆனால், திமுக எதற்கும் அஞ்சிய இயக்கம் கிடையாது. இந்தி எதிர்ப்புப் போராட்டம் தொடங்கி பல்வேறு உரிமைகளுக்காகக் கடுமையாகப் போராடி உயிர்த் தியாகம் செய்த இயக்கம் திமுக. எங்களைப் பற்றி காங்கிரஸ் கட்சிக்கு நன்றாகவே தெரியும்.

ஒரு மசோதாவை ஆதரிப்பது கூட்டணியாகிவிடுமா?:

ஒரு மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்தால் அந்தக் கட்சி பாஜகவுடன் கூட்டணியில் இருப்பதாகப் பலரும் பேசி வருகின்றனர். இதே கட்சிகள், குறிப்பாக காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான 10 சதவீத இடஒதுக்கீடு (EWS) மசோதாவை பாஜக கொண்டுவந்தபோது ஆதரவு தெரிவித்தன.

அப்படியானால், அந்த மசோதாவை ஆதரித்ததற்காக காங்கிரஸ் கட்சி பாஜகவுடன் கூட்டணியில் இருப்பதாகக் கூற முடியுமா? ஒரு குறிப்பிட்ட மசோதாவை ஆதரிப்பதையும், அரசியல் கூட்டணியில் இடம்பெறுவதையும் ஒன்றாகப் பார்க்கக் கூடாது என்று கனிமொழி கேள்வி எழுப்பினார்.

தொகுதி மறுவரையறை மசோதாவும் திமுகவின் நிலைப்பாடும்: அரசியல் விமர்சகர் பாலச்சந்திரன் ஐஏஎஸ் எச்சரிக்கை!

 

MUST READ