தீட்சிதர் குழந்தை திருமணம்- ஆடியோ ஆதாரம் உள்ளது: மா.சு
குழந்தைகள் நல ஆணைய உறுப்பினருக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “சிதம்பரம் தீட்சிதர்களின் குழந்தைகளுக்கு இருவிரல் பரிசோதனை நடக்கவில்லை என தேசிய குழந்தைகள் நல ஆணைய உறுப்பினர் தவறான தகவல் அளித்துள்ளார். மருத்துவரிடம் குழந்தைகள் நல ஆணைய உறுப்பினர் என்ன பேசினார் என்ற ஆடியோ ஆதாரம் உள்ளது. குழந்தைகளின் நலன் கருதி அந்த ஆடியோவை வெளியிட விரும்பவில்லை. இருவிரல் பரிசோதனை நடக்கவில்லை எனக் கூறிவிட்டு ஆளுநரை சந்தித்தபின் பரிசோதனை நடந்ததாக கூறினார். இருவிரல் பரிசோதனை நடத்தப்பட்டதாக ஆளுநருக்கு தவறான தகவல் அனுப்பப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 3 மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்தாகாது, துறை சார்ந்த விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. சிறு குறைகளை வைத்து மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரத்தை நீக்குவோம் என்று சொல்வது ஏற்புடையதல்ல. குறை உள்ளது என்று தெரிந்தால் அரசு நிச்சயம் சரி செய்யும். மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சரை சந்திக்க நேரம் கேட்டு கடிதம் அனுப்பி இருக்கிறோம்” எனக் கூறியுள்ளார்.